எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 8 ரயிலில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவு பொருள்களை எடுத் துச் செல்லும் பயணிகளுக்கு, 6 மடங்கு அபராதம் விதிப்ப தென்று இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டில்லியில் இந்திய ரயில்வே மூத்த அதி காரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனுமதிக்கப்பட்டதை விட அதிக பொருள்களை எடுத்து வரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய் யும் விதிகள், 30 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு விட்டன. அதை தீவிரமாக அமல்படுத்தவே ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் படி, இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடைக்கு, லக்கேஜ் கட்டண மாக ஒன்றரை மடங்கு கட் டணம் பெறப்படும். இதைக் காட்டிலும் அதிக எடையுடைய பொருள்களை கொண்டு வந் தால், லக்கேஜ் கட்டணத்தை விட 6 மடங்கு அபராதமாக வசூலிக்கப்படும்.

தூங்கும் வசதி பெட்டிகள், 2ஆம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் நபர்கள், முறையே 40 கிலோ, 35 கிலோ எடையுடைய பொருள்களை இலவசமாக கொண்டு செல்ல லாம். அதுமட்டுமன்றி, தூங் கும் வசதி பெட்டிகளில் பயணி ஒருவர் அதிகப்பட்சமாக 80 கிலோ பொருள்களையும், 2ஆம் வகுப்பு பெட்டிகளில் அதிகப்பட்சமாக 70 கிலோ பொருள்களையும் எடுத்து வரலாம். அப்போது இலவச மாக அனுமதிக்கப்பட்ட அள வைக் காட்டிலும் அதிக எடையுடைய பொருளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதற்கும் அதிக எடையு டைய பொருள்களை, பயணி கள் உடன் எடுத்து வரக் கூடாது. பொருள்களுக்கான பிரத்யேக பெட்டிகளில்தான் அவை எடுத்து வரப்படும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

பயணிகள் எடுத்து வரும் பயணப் பெட்டி, சூட்கேஸ்கள், டப்பாக்கள் ஆகியவை ரயில்வேயில் குறிப்பிடப்பட்ட அளவுகளிலேயே இருக்க வேண்டும். அதைவிட அள வில் பெரிய பொருள்கள் அனு மதிக்கப்படாது. அவற்றை, ரயிலில் இருக்கும் பொருள் களுக்கான பெட்டிகளிலேயே எடுத்து வர வேண்டும். இது தொடர்பாக பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்ப டுத்த ரயில்வேதுறை தீர்மானித் துள்ளது என்றார் அவர்.