எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர்.எஸ்.எஸ். முகாமில் பிரணாப் முகர்ஜியை 'மார்பிங்' செய்து படம் வெளியீடு

நாக்பூர், ஜூன் 10 ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் முன் னாள் குடியரசுத் தலைவர் பிர ணாப் முகர்ஜி கலந்துகொண்ட நிலையில் அது தொடர்பான 'மார்பிங்' செய்யப்பட்ட புகைப் படம் குறித்து பிரணாப்பின் மகள் கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் 7.6.2018 அன்று ஆர்.எஸ்.எஸ். தொண் டர்களின் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளப் போவதற்கு முன்னதாகவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பிரணாப் பின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி யும் அதிருப்தி தெரிவித்திருந் தார். இந்நிலையில்,  வியாழக் கிழமையன்று பிரணாப் பங் கேற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச் சியில் அவர் கருப்பு தொப்பி அணிந்து, கைகளை நெஞ்சில் வைத்து உறுதி மொழி கூறுவது போன்ற புகைப்படம் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. அது மட்டுமல்லாது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் அவர் புகழ்ந்து பேசியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் கள் பரவின. ஆனால், இவை அனைத்தும் உண்மைக்கு மாறானதாகும். இதுகுறித்து பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தனது கருத்தை  டுவிட் டர் பக்கத்தில் வெளியிட்டுள் ளார். அதில், 'நான் எதை நினைத்து பயந்தேனோ, எதற் காக எனது தந்தையை அந்த நிகழச்சியில் பங்கேற்க வேண் டாம் என எச்சரித்தேனோ அது நடந்தே விட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலமணி நேரங்கள் கூட ஆகவில்லை. ஆனால், பாஜக - ஆர்.எஸ்.எஸ். அதன் வேலையை முழு வீச்சாக செய்ய ஆரம்பித்துவிட்டது' என தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner