எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூன் 11 முதல்அமைச்சர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்று தெரிந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலைக்கு செய்துள்ளனர். கண்டமங்கலம் அருகே ஒரு மாணவி தற்கொலை முயன் றுள்ளார். இது வருத்தம் அளிக் கிறது. அவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே நீட் தேர்வு வந்த பின்னர் பல உயிர்களை இழந்துள்ளோம். இதனால் இளைய சமுதாயங்களை இழக் கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தபின் மீண்டும் நீட் தேர்வு என்பதை ஏற்க முடியாது. ஏற்கெனவே பாடத்திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி, அதற்கான மதிப் பெண்ணை பெற்றுள்ளனர். எனவே நீட் தேர்வு தேவை இல்லாத ஒன்று. புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது 5 ஆண்டு களுக்காவது விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்னை வந்த போது நீட் தேர்வு மரணம் ஒரு மரணமா? என்று கேலியாக பேசியுள்ளார். தமிழகம், புதுச்சேரி மாணவர்களின் மன நிலையை புரிந்து கொள்ளாமல் அவர் விமர்சனம் செய்திருப்பது வருந்தத்தக்கது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கன வோடு கடினமாக உழைத்து பிளஸ்2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கூட, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் மருத்துவர் ஆகும் கனவு தகர்க்கப்படுவது ஏற்க முடியாத ஒன்று. எனவே நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க. இல்லாத முதல்அமைச்சர்களை ஒருங் கிணைத்து உச்சநீதிமன்றத்தை அணுகி நீட் தேர்வை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு முழுமை யான ஆதரவை நாங்கள் தெரிவிக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப் படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்த போது சாதாரண, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர் களுக்கு இடம் கிடைத்தது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.