எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

அய்தராபாத், ஜூன் 11- ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2019-ம் ஆண்டு வரவுள்ள பொதுத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்து உள்ளார். மேலும், மோடியை விட அரசியலில் தான் மூத்தவர் என்றும் இருப்பினும் நான் மோடிக்கு மிகுந்த மரியாதை அளித்து வந்ததாகவும், ஆனால் மோடி அதனை உணரவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அவரது கூட்டணி கட் சிகளை நலிவடையச் செய்வ தன் மூலம் தனது கட்டுப்பாட் டில் வைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், அதனை முறியடித்து தனித்து இயங்க முடியும் என்பதை உணர்த்தவே கூட்டணியை முறித்துக்கொண் டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆந்திர மாநிலத் தின் நலனுக்காகவே தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்ததாகவும், ஆனால் அதனால் எவ்வித பயனும் இல்லாத நிலையில் ஏன் கூட் டணியை தொடர வேண்டும் எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2014 பொதுத்தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளும் அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக் கைகளும் மக்களுக்கு கடும் பாதிப்பையே ஏற்படுத்தியுள் ளது. மத்திய மற்றும் மாநிலங் களில் பாஜக இனி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும், பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், மத்தியில் 3-ஆவது கட்சி ஆட்சி அமைக்க முடியுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆந்திர முதலமைச் சர், 3-ஆவது கட்சி ஆட்சியில் அமர்வது சுலபம் அல்ல. எனி னும், பாஜகவுக்கு அந்த 3ஆ-வது கட்சி மிகப்பெரிய தலை வலியை நிச்சயம் உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

 

அதையடுத்து, பிரதமர் மோடியின் தலைக்கனத்தின் காரணமாகத்தான் கூட்டணி கட்சிகளை பாஜக இழந்து வரு வதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், தனித்து போட்டியி டப் போகும் தெலுங்கு தேசம் கட்சி நிச்சயம் பெரும்பான்மை யுடன் வெற்றி பெரும் எனவும் அப்போது அவர் தெரிவித்து உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner