எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூன் 11- உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாமியார் ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா தலைமையில் இயங்கி வரும் பதஞ்சலி நிறுனத்தின் பதஞ்சலி உணவு மற்றும் ஹெர்பல் பார்க் உணவுப்பூங்கா அமைத் திட, அம்மாநில அரசு நிலம் வழங்க மறுத்த நிலையில், இப்பூங்காவை வேறு மாநிலத் திற்கு மாற்றத் திட்டமிட்டது பதஞ்சலி நிர்வாகம்.

ஏற்கெனவே ஏராளமான அளவில் அம்மாநிலத்தில் சலுகை விலையில் நிலத்தை பெற்றுக்கொண்டுள்ள சாமியார் ராம்தேவின் நிறுவனம் மேலும் நிலம் ஒதுக்க வேண்டும் என்று கோரி வந்த நிலையில் மாநில அரசு மறுத்து வந்தது.

இந்தக் கோரிக்கை நிராகரிப் புச் செய்யப்பட்ட நிலையில் இப்பூங்கா வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் எனப் பதஞ்சலி நிறுவன தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா அறிவித்தார்.

இதனிடையே உணவு பூங் காவுக்காக சாமியார் ராம்தேவ் நிறுவனத்துக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் பல முக்கியச் சலு கையை அளித்துள்ளார்.

இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் நேரடியாகத் தலையீட்டு, பதஞ்சலி உணவு மற்றும் ஹெர்பல் பார்க்-கிற்கு ஒதுக்கப்படும் நிலம் குறித்துச் சட்டசபையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச அரசு பாபா ராம்தேவின் கட்டுப் பாட்டில் இருக்கும் மற்றொரு நிறுவனத்திற்குச் சுமார் 86 ஏக்கர் நிலத்தை உள் குத்தகை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 455 ஏக்கர் நிலம் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கு  25 சதவீத சலுகை விலையில் நவம்பர் 2, 2016இல் அப்போதைய ஆட்சி யாளர்களால் அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் மார்ச் 23, 2018இல் உணவு பூங்காவிற்கு 86 ஏக்கர் நிலம் உள் குத்தகைக்கு அளிக்க வேண்டும் எனப் பதஞ்சலி நிறுவனம் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தது.

சாமியார் ஆதித்யநாத் 86 ஏக்கர் நிலத்தை சாமியார் ராம்தேவின் நிறுவனத்துக்க அளித்து பல சலுகைகளையும் அளிக்க முன்வந்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner