எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜுன் 12- வாக்களித்த விவரம் அறிவிக்கும் மின் னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் தொடர்ந்து பழுதடை வது மிகவும் தீவிரமான பிரச் சினை என முன்னாள் தலை மைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) எஸ்.ஒய்.குரோசி தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான கால நிலையிலும் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற பிறகே விவிபேடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாடுமுழுவதும் பயன்படுத்தத் தொடங்கியதா கவும், ஆனால் இப்போது வாக்குப்பதிவின் போது இயந் திரங்கள் தொடர்ந்து பழுத டைந்து வருவது ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது என குரேஷி கூறினார்.

குரோசி தலைமைத் தேர் தல் ஆணையராக இருந்த போது 2011 ஆம் ஆண்டு வாக்களித்த விவரம் அறியும் விவிபேடு இயந்திரம் பரி சோதனை நடத்தப்பட்டது. 2013ஆம் ஆண்டு செப்டம் பரில் நாகாலாந்து மாநில வாக்குப்பதிவில் விவிபேடு இயந்திரங்கள் முதன்முறை யாக பயன்படுத்தப்பட்டன. அப்போதும் அவர்தான் தலை மைத் தேர்தல் ஆணையர்.

ஈரப்பதம் மிக்க கேரள காலநிலைக்கும், வறண்ட, சூடுமிக்க ராஜஸ்தான் மாநி லம், ஜெய்சால்மிரிலும், லடாக் கின் உயர்ந்த பிரதேசங்களி லுள்ள கடுமையான குளிரி லும், தொடர்ந்து மழை பெய் யும் சிரபுஞ்சியிலும் விவி பேடு இயந்திரங்கள் பரிசோ திக்கப்பட்டன. முதற்கட்ட பரிசோதனையில் சில இயந் திரங்கள் முடங்கியதால் அதற் கான காரணங்கள் கண்டறி யப்பட்டு மீண்டும் பரிசோதிக் கப்பட்டன.

அதன்பிறகே விவிபேடு இயந்திரங்கள் நாட்டில் நடந்த தேர்தல்களில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. அனைத் துப் பரிசோதனைகளும் வெற் றிகரமாக நடந்த பிறகும் நாட் டில் அடுத்து நடந்த தேர்தல் களில் வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் முடங்கி வருவது தீவிரமாக கவனிக்கத்தக்கது.

உத்தரப்பிரதேசம் கெய்னா இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முடங்கி யதற்கு வெப்பம் மற்றும் அதிகமான வெளிச்சத்தை கார ணமாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஏதாவது வாக்குப்பதிவு மய்யத்தில் விவிபேடு ரசீதுகள் மட்டும் எண்ணப்படும் முறை சரி யல்ல. நிலையாக குறிப்பிட்ட சதவீதம் ரசீதுகளையாவது எண்ணி உறுதிப்படுத்த தேர் தல் ஆணையம் முன்வரவேண் டும் என குரோசி சுட்டிக் காட்டினார்.