எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 14 கருநாடக மாநிலத்தில் தென் கன்னட மாவட்டத் தில் உள்ள குக்கெ சுப்பிரமணியன்  கோயில் செல்வச் செழிப்பு, மிகுந்த கோயில். ஆண்டு வருமானம் ஆண் டுக்கு ரூ.95 கோடிக்கு  மேல் வரும் இந்தக் கோயில் கருநாடக அரசின் அறநிலைத்துறையின் (முசுராய்) கீழ் வருவது. என்ன காரணத்தாலோ, அண் மைக் காலமாக, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கான சிறப்புப் பூஜைகளையும், சடங்கு களையும்  கோயிலுக்கு வெளியே நடத்தத் தொடங்கிவிட்டனர். அதற்கான முகவர்களும் இடைத்தரகர்களும் பெருகிவிட்டனர். இணைய தளங்களி லும் கோயிலுக்கு வெளியே நடத்தப் படும் சிறப்புப் பூஜைகளுக்கான விளம் பரங்கள் பெருகிவிட்டன.  கோயிலுக்கு உள்ளே நடக்கும் மோசடிகள் அல்லது கொள்ளைகள் காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் காலங் காலமாக  இருந்து வந்த முறையை ஏன் பக்தர்கள் மாற்ற முற்பட வேண்டும்?இதனால் கோயிலுக்கு வரும் வருமானம் சரியத் தொடங்கிவிட்டது.

கோயிலின் வருமானம் சரியத் தொடங்கியதால் பாதிக்கப்பட்ட கோயில் நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

மிரட்டல்பாணியில் அமைந்துள்ள அந்த அறிக்கையில்,  கோயிலுக்கு வெளியே மண்டபங்களிலும் மடங் களிலும் குளற்றங்கரைகளிலும் ஆற்றங் கரைகளிலும் பொது இடங்களில் நடத் தப்படும்  பூஜைகள் மற்றும் சடங்குகளில் பக்தர்களால் முன்வைக்கப்படும் வேண் டுதல்கள் கோயிலின் மூலக் கடவுள் குக்கெ சுப்பிரமணியனைச் சென்றடை யாமல் போகலாம். அதனால் பக்தர் களின் வேண்டுதல்களுக்குப் பலன் கிடைக்காது. எனவே பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களையும், பூஜைகளையும் சடங்குகளையும் கோயிலுக்குள் நிர் வாகத்தின் கட்டுத்திட்டங்களுக்கு உட் பட்டே நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வெளியே நிகழ்த்தப் படும் பூஜைகளுக்கான இடைத்தரகர்கள் பெருகிவிட்டதாலேயே, நிர்வாகம் இந்தச் சுற்றறிக்கையை வெளியிட நேர்ந்தது என்று கோயிலின் நிர்வாக அதிகாரி எம்.எச்.இரவீந்தரா கூறியுள் ளார்.

தன் வருமானம் பறிபோவதை  தடுக்க இயலாத குக்கே சுப்பிரமணியன், தங்களுக்கு வரும் கேடுகளை அகற்றித்  தங்களைக் காப்பார் என்று முட்டாள் தனமாக மக்கள்  நம்புவதையே இந்தச் செய்தி மெய்ப்பிக்கின்றது.

தகவல்: பெங்களூரு முத்துசெல்வன்