எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தைவிட அதிக நாட்கள் வெளிநாட்டில் தான் கழித்துள்ளார்

புதுடில்லி, ஜூன் 15- பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 4 ஆண்டு பதவிக்காலத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் சென்றிருப்பதாகவும், மிக அதிகமான நாட்களை அவர், வெளிநாட்டிலேயே கழித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டில்லி உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் தொடர்ந் துள்ளார். "பிரதமர் மோடி தன்னு டைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள் ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். அதிலும் ஆண்டிற்கு 4 நாட்கள் என்ற அளவிலேயே அவர் நாடா ளுமன்றத்திற்கு வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றத்திற்கு வரவேயில்லை. நாடாளுமன்றம் வந்த நாட்களி லும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலேயே இருந்துள்ளார். அவர் ஆறு முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டுமுறை முன் னாள் பிரதமர் நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தி யுள்ளார். இரண்டுமுறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். இதைத் தாண்டி நாடாளுமன்ற விவாதங்களில் அவர் பங்கேற்றது 4 முறைதான்.மோடி இந்த நான்கு ஆண்டுகளில் நாடாளுமன் றத்தில் இருந்ததைவிட அதிகமாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்து பேசியுள்ளார். எல்லா வாரமும் வானொலி மூலம், மன் கி பாத்தில் பேசியுள்ளார். ஒருமுறை பண மதிப்பிழப்பு செய்யப் படுவதாக பேசியுள்ளார். ஆனால் மக்கள் பிரச்சினைகள் எதைப் பற்றியும் அவர் பேசவே இல்லை. மக்களின் முக்கியமான பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் உயர்வு, ஜிஎஸ்டி, மத வெறிப் பிரச்சினை, ஜாதியப் படுகொலை, வங்கிகள் செய்யும் மோசடிகள் என எதிலும் பிரதமர் பேசவில்லை. கூடுதல் தகவலாக, பிரதமர் நாடாளுமன்றம் நடக் கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடு களில் இருந்துள்ளார்.

அவர் அதிக நாட்களை நாடாளுமன் றத்தை விட வெளிநாடுகளில்தான் கழித் துள்ளார்" என்று சஞ்சய் சிங் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர்களிலேயே மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்றால் அவர் மோடிதான். நாடாளுமன் றத்தில் பேசாத அவர், வெளிநாடுகளுக்கு செல்லும்போது சத்தம் போட்டு பேசுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார். அதாவது எங்கு கேள்வி கேட்கமாட்டார்களோ அங்கு மட்டுமே மோடி பேசி வருகிறார். நாடாளுமன் றத்திற்கு 19 முறை மட்டுமே சென்றுள்ள மோடி, கடந்த 4 ஆண்டுகளில் 77 வெளி நாட்டுப் பயணங்களை முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner