எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜுன் 15 -உலகப்புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமாக விளங்கும் தாஜ்மகால் மீது சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தி மேற்கு நுழைவு வாயிலைத் தகர்த்தனர். சம்மட்டிகளும், கடப்பாரைகளுடன் வந்த விஎச்பி அமைப்பினர் இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தை விஎச்பி அமைப்பினர் நியாயப்படுத்தவும் செய்துள்ளனர். பசாய் கட்டிலுள்ள சித்தேஸ்வர் மகாதேவர் கோவிலுக்கு செல்லும் வழியில் தாஜ்மகாலின் மேற்கு நுழைவு வாயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு செல்லும் வழிக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி இந்த அட்ட காசத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, தாஜ்மகாலின் பெயரை ராம்மகால் என்றோ, கிருஷ்ண மகால் என்றோ மாற்ற வேண்டும் என கூறிக்கொண்டு பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் வந்திருந்தார். இது குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் காவல் துறையில் அளித்த புகாரின் பேரில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner