எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவரை உயர்சாதியினர் சிலர் அடித்து உதைத்து மீசை எடுக்க வைத்து உள்ளனர்.

குஜராத் மாநிலம் பலான்பூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ரஞ்சித் தாகூர். தாழ்த்தப்பட்ட இளைஞரான இவர் ஜூன் 4ஆம் தேதி தனது கிராமத்தில் நடைபெற உள்ள முடி இறக்கும் விழாவுக்கான அழைப்பிதழை வழங்க கடந்த மே 27ஆம் தேதி காட் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அழைப்பிதழில் அந்த இளைஞரின் பெயர் ரஞ்சித் சின்ஹ் என்று இருந்துள்ளது. இதை கவனித்த அந்த ஊர் உயர்சாதியினர் சிலர் சின்ஹ் என்ற பெயரை எப்படி பயன்படுத் தலாம் என்று கூறி இளைஞரிடம் சண்டைக்கு வந்துள்ளனர்.

பின் ரஞ்சித்தை அருகில் உள்ள காட் டுப் பகுதிக்கு இழுத்துச்சென்ற அவர்கள் அவரை அடித்து உதைத்து வலுக்கட்டாய மாக மீசையை எடுக்க வைத்திருக்கின்றனர். இது தொடர்பாக ரஞ்சித் பலான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் ரஞ்சித் 15 பேரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையி னர் மதூர்சின்ஹ் பாபி என் பவரை மட்டும் கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றவர்களும் விரை வில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கருத்து தெரிவித்துள்ள ரஞ்சித்தின் தந்தை, தனது மகனுடைய பள்ளி மாற்றுச்சான்றிதழில்கூட ரஞ்சித் சின்ஹ் என்ற பெயர்தான் குறிப்பிடப்பட்டி ருந்தது என்று கூறுகியுள்ளார்.

தொடர்ந்து தாழ்த்தப்பட்டமக்களின் மீது நடக்கும் தாக்குதல்கள்

குஜராத்தில் கடந்த மார்ச் மாதம் தாழ்த் தப்பட்ட இளைஞர் ஒருவர் குதிரைமீது ஏறி வந்தது தொடர்பாக அந்த இளைஞரையும், குதிரையையும் கொலைசெய்தனர். இதே போல் கடந்த ஜனவரி மாதம் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றார்கள் என் பதற்காக கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டனர். இதில் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப் பட்டது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோலாட்ட நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்த தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப் பட்டார். கடந்த ஆண்டும் இதோ போல் சில தாழ்த்தப்பட்ட இளைஞர் கள் மீசை வைத்த காரணத்தால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner