எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்காவின் சிஅய்ஏ அறிவிப்பு

புதுடில்லி, ஜூன் 16 இந்தியாவில் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகியவை மத அடிப் படையிலான ஆயுதக் குழுக்கள் என்று அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ உளவு அமைப்பான சிஅய்ஏ அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடு களில் நடக்கும் அரசியல், சமூக, பொரு ளாதார நிகழ்வுகளை உளவு பார்க்கும் சிஅய்ஏ, அது தொடர்பாக ஆண்டுதோறும் அமெரிக்க அரசுக்கு அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கைக்கு உலக நடப்பு நில வரம் என்று பெயர். இந்த நடப்பு நில வரம், அமெரிக்காவால் அரசுகளாக அங் கீகரிக்கப்பட்ட 266 நாடுகளைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும். அந்தத் தக வல்களின் அடிப்படையில்தான் அமெரிக்க அரசு தனது கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும்.

1962-ஆம் ஆண்டு முதல் தயாராகும் இந்த உலக நடப்பு நிலவர அறிக்கை, முன்பு ரகசியமாகவே வைக்கப்பட்டு வந்தது. ஆனால், 1975-ஆம் ஆண்டு முதல் இந்த நடப்பு நிலவரத்தை சிஅய்ஏ வெளிப் படையாகவே வைத்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் வெளியான நடப்பு நிலவர புத்தகத்தில்தான், இந்தியா வில் இருக்கும் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை மத அடிப்படையிலான ஆயுதக் குழுக்கள் என்று சி.அய்.ஏ. பட்டியலிட்டுள்ளது.

மேலும் ஆர்.எஸ்.எஸ்., ஹூரியத் மாநாட்டுக் கட்சி, ஜாமியா உலமா- இ -ஹிந்த் ஆகிய அமைப்புகளை அரசியல் அழுத்தம் தரும் அமைப்புகள் என்று சிஅய்ஏ வகைப்படுத்தியுள்ளது. இதிலும், ஆர்.எஸ்.எஸ்-ஸை தேசியவாத அமைப்பு என்றும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியைப் பிரிவினைவாதக் குழு என்றும், ஜாமியா உலமா -இ- ஹிந்த்தை மத அமைப்பு என்றும் சிஅய்ஏ ரகம் பிரித்துள்ளது. சிஅய்ஏ-வின் இந்த அறிக்கை சங்-பரிவாரங்களை கலவரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner