எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தகவல்

புதுடில்லி, ஜூன் 16 இந் தியாவில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், தங்களது திரு மணத்தை 7 நாள்களுக்குள்ளாக பதிவு செய்ய வேண்டும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு பதிவு செய்யப் படாத பட்சத்தில், நுழைவு இசைவு மற்றும் கடவுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட மாட் டாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த வாரம், வெளி நாடுவாழ் இந்தியர்களின் திரு மணம் 48 மணி நேரத்துக் குள்ளாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணத் தின்போது பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு சட்டரீதியான தீர்வை ஏற்படுத்துவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட் டம் டில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தின் முடிவில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணம் 7 நாள்களுக்குள்ளாக பதிவுசெய்யப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளி நாடுவாழ் இந்தியர்கள் தங் களது வாழ்க்கைத் துணையை நிர்கதியாக விட்டுத் தலைமறை வாகும் விவகாரங்களில், அவர் களது சொத்துகளை பிணையாக பிடித்து வைப்பது (எஸ்க்ரோவ்) தொடர்பாகவும் இந்தக் கூட் டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. எனினும், அதனை அமல் படுத்த, குற்றவியல் நடை முறைச் சட்டம், திருமணச் சட்டம், கடவுச்சீட்டுச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவர வேண்டியுள்ளது.

மேலும், கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகளை அமல் படுத்த சட்டத்திருத்த வரையறையை கொண்டு வருமாறு 3 அமைச்சர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்' என்றார்.

தற்போதைய நடைமுறை யில், வெளிநாடுவாழ் இந்தி யர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்வதற்கான கால அவ காசம் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.