எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை விவகாரம்:

மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவாம்!

புதுடில்லி, ஜூன் 16 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் புகார் தொடர்பாக அய்.நா. அறிக்கை அளித் துள்ள விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு காங் கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீ ரிலும் மனித உரிமைகள் மீறப் படுவதாக அய்.நா. அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந் தியா அதை நிராகரித்து விட்டது.

இந்நிலையில், அதுகுறித்து காங்கிரஸ் தகவல்தொடர்பு பொறுப்பாளர் ரண்தீப் சுர்ஜே வாலா கூறியதாவது: ஜம்மு காஷ்மீரானது இந்தியாவுடன் ஒருங்கிணைந்த, பிரிக்கமுடியாத பகுதியாகும். அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாக அய்.நா. அளித்துள்ள அறிக் கையை காங்கிரஸ் நிராகரிக்கிறது. அந்த அறிக்கை, இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்களை பாதிக்கும் வகையில் சுயநலத்துடன் பாரபட்சமாக தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கும் காங்கிரஸ் ஆதரவளிக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் கள நில வரம் என்ன என்பதை துளியும் அறியாமல் அய்.நா. இந்த அறிக் கையை தயாரித்துள்ளது. ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்பு களை அந்த அறிக்கை எவ்வாறு நியாயப்படுத்த முடிகிறது? பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் இந்தியாவில் மேற்கொள்ளப் படும் பயங்கரவாத தாக்குதல் களை அய்.நா. கருத்தில் கொள்ள வேண்டும் என்று ரண்தீப் சுர் ஜேவாலா கூறியுள்ளார். முன் னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லாவும் இதே கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் இதுபோன்ற நட வடிக்கைகளை நாங்கள் நிரா கரிக்கிறோம்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner