எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், ஜூன் 17- -மத்தியப்பிர தேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக போராட் டம் நடத்திய இளம்பெண் களை, சிறையில் அடைத்த காவல்துறையினர், அவர்களை மிகமோசமான முறையில் நடத் தியதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது.

மத்தியப்பிரதேச காவலர் தேர்வில், பெண்களுக்கான உய ரத்தைக் குறைக்க வேண்டும் என்று தேர்வுக்கு விண்ணப்பித்த இளம்பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் முதல்வரை கடந்த 13-ஆம் தேதி முற்றுகையிட்ட னர். இவர்களில் 9 பேரை மத் தியப் பிரதேச காவல்துறை கைது செய்தது. குற்றவியல் நடை முறைச் சட்டப்பிரிவு 151-ன் கீழ் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த காவல்துறையினர் மறுநாள் விடுவித்தனர். ஆனால், வெளியே வந்த இளம்பெண்கள், சிறை யில் அடைக்கப்பட்ட தங்களை காவல்துறையினர் மிக மோச மாக நடத்தியதாக குற்றம் சாட் டினர்.

இதுதொடர்பாக செய்தியா ளர்கள் மத்தியில் பேசிய அவர் கள், நாங்கள் குற்றவாளிகள் போன்று நடத்தப்பட்டோம். முதலில் காவல்துறையினர் எங் களை வேனில் ஏற்றினார்கள், போபாலுக்கு மூன்று மணி நேரங்கள் பயணித்தோம். எங் களுடைய செல்போன்களை பறித்துக் கொண்டார்கள். எங் களுடைய பெற்றோர்களிடம் பேச அனுமதிக்கவில்லை. நாங்கள் சிறைக்கு இரவு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு சென்றதும், நாங்கள் தனியாக ஒரு அறைக்கு அழைத்து செல்லப் பட்டோம், சிறுநீர் பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டோம், அதாவது நாங்கள் கர்ப்பமாக இருக்கி றோமா? என பரிசோதனை நடத்தப்பட்டது; ஆனால், ஆண்களையும் வைத்துக் கொண்டே இந்த பரிசோத னையை நடத்தினார்கள்;

மேலும் எங்களைக் கொலைக் குற்றவாளிகளுடன் உட்காரவைத்து அவமதித்தனர்; எங்களுக்கு மிகுந்த அவமான மாக போய்விட்டது என்று கூறியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு மத்தி யப் பிரதேசத்தில் விவாதங் களை கிளப்பியது. பாஜக அர சுக்கு எதிராக பல்வேறு தரப்பி னர் மத்தியிலிருந்து கண்டனங் களும் குவிந்தன.இதையடுத்து, பிரச்சினையை சமாளிப்பதற் காக, காவலர் பணிக்கு விண்ணப் பித்த பெண்களின் குறைந்த பட்ச உயரம் 158 செ.மீ. இருக்க வேண்டும் என்ற நிலையில், அதில் 3 செ.மீ. குறைக்கப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவசர அவசரமாக அறிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner