எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 17 மூத்த பத்திரி கையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர் பாக இந்துத்துவா தீவிரவாதி பரசுராம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு வினர் நடத்திய விசாரணையில் இந்துத்துவா தீவிரவாதிகள் அடுத்தடுத்து சிக்கினர்.

இந்த நிலையில் பரசுராம் வாக்மாரே என்ற தீவிரவாதியை விஜயபுரா மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பரசுரா மிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காவல் துறையிடம் அளித்த வாக்குமூலம்:

"என்னுடைய மதத்தைக் காப்பாற்ற ஒருவரை கொலை செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் எனக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. நானும் இதற்கு ஒப்புக் கொண்டேன். யாரை கொலை செய்யப் போகிறேன் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் தற்போது ஒரு பெண்ணை கொலை செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். செப்டம்பர் 3-ஆம் தேதி பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டேன். பெலகாவியில் ஏர்கன் மூலமாக எனக்கு துப்பாக்கியால் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. பெங்களூருவில் முதலில் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 2 மணிநேரம் கழித்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் என்னை அழைத்துக் கொண்டு கொலை செய்யப்பட வேண்டியவரின் வீட்டை காண்பித்தார்.

மறுநாள் என்னை இன்னொரு அறையில் தங்க வைத்தனர். மறுபடியும் ஆர்.ஆர். நகரில் உள்ள கவுரி லங்கேஷ் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அன்று மாலைக்குள் அந்த நபரை கொலை செய்ய வேண்டும் என எனக்கு உத்தரவிடப்பட்டது. செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 4 மணியளவில் என்னிடம் துப்பாக்கியை கொடுத்தனர். அதன்பின்னர் நாங்கள் கவுரி லங்கேஷ் வீட்டுக்குப் போனோம்.

அப்போதுதான் கவுரி லங்கேஷ் வீட்டு கேட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு கதவை திறந்தார். அவரை மிகவும் பக்கத்தில் நெருங்கினோம். அவர் எங்களை பார்த்த போது 4 குண்டுகளால் அவரை அடுத்தடுத்து சுட்டேன். பின்னர் அறைக்குத் திரும்பி அந்த இரவே பெங்களூருவை விட்டு புறப்பட்டு விட்டேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுபோன்று தான் தபோல்கர், கல்புர்கி, கோவிந்த பன்சாரே உள்ளிட்ட பகுத்தறிவு வாதிகள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலை களுக்கும்  சனாதன் சன்ஸ்தா, இந்து ஜாகரன் மஞ்ச் போன்ற அமைப்புகள்தான் காரணம் என்று தெரிந்த பிறகும் இன்றுவரை அந்த அமைப் புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்த அமைப்புகளை தற்போது அமெரிக்க உளவு நிறுவனம் கூட தீவிரவாத அமைப்புகள் என்று அறிவித்த பிறகும் அந்த அமைப்புகளைத் தடை செய்யாமல் குற்ற வாளிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு இறங்கி வருகிறது.