எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆக்ரா, ஜூன் 17 -ஒடிசா மாநிலத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மோடி இன்னும் நிறை வேற்றவில்லை என்பதை அவருக்கு நினைவுபடுத்தும் விதமாக, இளைஞர் ஒருவர் 1350 கி.மீ. தூர நடைபயணம் மேற்கொண்டு கவனம் ஈர்த்துள்ளார்.

ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியைச் சேர்ந்தவர் முக்திகண்ட். 30 வயது இளைஞரான இவர்தான், தனிநபராக மோடியின் பொய்களை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தை நடத்தி யுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்திற்கு வருகை தந்தார்; அப்போது, எங்கள் பகுதியில் உள்ள இஷ்பாட் மருத்துவமனைக்கு பல்வேறு மருத் துவ வசதிகள் செய்துதரப்படும்; ப்ராஹ்மன் பாலப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என வாக்குறுதிகள் அளித் தார்; பல புதிய திட்டங்களையும் அறிவித்தார்; ஆனால் எதுவும் நடக்கவில்லை; மருத்துவமனையில் ஏற்கெனவே இருந்த அடிப்படை வசதிகளும் தற்போது மோச மாகி விட்டது; எனவே, பிரதமருக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும் விதமாக தேசியக்கொடியை கையில் ஏந்தி நடைபயணத்தைத் துவங்கினேன் என்று கூறியுள்ளார்.

ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்றபோது முக்திகண்ட் திடீரென மயங்கி விழுந்ததால், தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணத்தை ஒருபோதும் கைவிடப் போவ தில்லை என்றும், உடல்நலம் தேறியதும் மீண்டும் பிரச்சாரத்தைத் தொடர உள்ளதாக வும் முக்திகண்ட் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner