எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூலை 18 ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள், வி.எச்.பி. போன்ற அமைப்பு களை அமெரிக்க உளவுத்துறை இந்து பயங்ரவாத அமைப்புகள் என்று அறிக்கை கொடுத் திருந்தது. இதனை அடுத்து அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ச்சி செய்வோம் என்று இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. அமெரிக்காவின் உளவு அமைப்பான மத்திய புல னாய்வு அமைப்பு உலக அள வில் பயங்கரவாத செயல்களில் இயங்கும் அமைப்புகள் குறித்து "பேட்புக்" (மோசமான அமைப்புகளின் விவரங்கள் குறித்த தகவல்)  என்னும் தகவல் புத்தகத்தை வெளியிட்டது. அதில் உலக நாடு களின் அரசியல், பொருளா தாரம், அமைப்பு இவைகளில் தனிப்பட்ட நபர்களின் தாக்கம், இவைகளை சீர்குலைக்கும் பயங்கரவாத அமைப்புகளை போன்றவற்றை பட்டியலிடும்.

அந்தப் புத்தகத்தில் இந்திய அமைப்புகளும் பட்டியலிடப் பட்டிருந்தன. இந்துத்துவ அமைப்புகளான விசுவ இந்து பரிசத்,  பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் மத ரீதியிலான தீவிரவாத அமைப்புகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தன. பா.ஜ.க.வின் தாய் அமைப்பான  ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் அமைப்பின் பெயரும் இதில் உள்ளது. இந்த விவகாரம் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் மத்தியில் எதிர்ப் பலையை ஏற்படுத்தி உள்ளது. `'அமெரிக்காவின் சி.அய்.ஏ அமைப்பினர் தங்கள் கருத்தைத் திரும்பப் பெறவில்லை என் றால் உலகளாவிய கிளர்ச்சியை ஏற்படுத்துவோம்' என்று விசுவ இந்து பரிசத் அமைப்பு மிரட் டல் விடுத்திருக்கிறது.

பட்டியலில் இடம் பெற்றது எப்படி?

இந்தியாவில் பாபரி மசூதி இடிப்பு, அதன் பிறகான கல வரங்கள், கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வு, அதன் பிறகு குஜராத் இந்துத்துவ வெறியர்களின் வன்முறைகள் என 1990-களில் இருந்து தொடர்ந்து மத அமைப்புகளால் இந்தியாவின் அமைதி சிதைந்து வருகிறது. இந்த இடைப்பட்ட கால கட்டத்தில் விசுவ இந்துபரிசத் மற்றும் பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பலவன் முறைகளை அரங்கேற்றின. இந்த வன்முறைகள் அனைத் தும் இந்து அமைப்புகளால் நேரடியாக நடத்தப்பட்ட வைகள் ஆகும். முக்கியமாக குஜராத் கலவரத்தில் விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பு போன்றவை நேர டியாக ஈடுபட்டது குறித்து சான்றுகளுடன் உறுதி செய்யப் பட்டது.  அதனை அடுத்து 2012-ஆம் ஆண்டு மகாராட்டிராவில் கொலைசெய்யப்பட்ட பகுத் தறிவாளர் நரேந்திர தபோல்கர், அவரது உற்ற நண்பரும் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளியுமான கோவிந்த பன்சாரே போன்றவர்கள் கொலையில் இந்து அமைப் பான சனாதன் சன்ஸ்தா ஈடுபட்டது என்று அப்போ தைய மகாராட்டிராவில் இருந்த அசோக் சவான் தலை மையிலான அரசு உறுதி செய்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு கருநாடகாவில் பகுத்தறிவாளரும், பேராசிரிய ருமான கல்புர்கி கொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு கவுரிலங்கேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த தொடர் கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டவை களாகும். இவர்களது கொலைகள் இந்துத்துவ அமைப்புகளின் பின்னணியில் அந்த அமைப் புகளின் உதவியுடன் செய்யப் பட்டன. இந்த நான்கு பேருடைய கொலைகள் உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. ஆகவேதான் இந்துத்துவ அமைப்புகள் அமெரிக்க உளவு நிறுவனம் வெளியிட்டுள்ள பயங்கர வாதிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner