எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொச்சி, ஜுன் 18- தினசரி விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை தொடங்கிய முதல் ஓராண்டில் டீசலுக்கு ரூ.13, பெட்ரோலுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

2017 ஜுன் 16 முதல் டீசல், பெட்ரோலுக்கு தினமும் விலை மாற்றம் மத்திய பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டது. அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.58.32 எனவும், பெட் ரோல் விலை ரூ.68.13 எனவும் இருந்தது. ஓராண்டுக்குப் பிறகு சனியன்று டீசல் விலை ரூ. 71.25, பெட்ரோல் விலை ரூ. 78.18 என உயர்த்தப் பட்டுள் ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணைய் பேரலுக்கு 147 டாலராக விலை உயர்ந்த போதும்கூட டீசலுக்கு ரூ.64.50 ஆகவே இருந்தது.

தற்போது கச்சா எண்ணெய் பேரலுக்கு 65.74 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் டீசல் விலை ரூ.71.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2015 முதல் கச்சா எண்ணெய் விலை 30 டாலராக குறைந்த போதும் கூட அதன்பலனை மக்களுக்கு அளிக்காமல் மத்திய அரசு சுங்கவரியைக் உயர்த்தியும், எண்ணெய் நிறு வனங்களின் லாப விகிதத்தை உயர்த்தியும் மக்களிடம் கொள்ளையடித்தது.

கச்சாஎண்ணெய் விலை குறைவும் சுங்கவரி அதிகரிப் பும் மோடி அரசு அதிகாரத்திற்கு வருவது வரை, மத்திய அரசு ஒரு லிட்டர் டீசலுக்கு 3.46 ரூபாயும், ஒரு லிட்டர் பெட் ரோலுக்கு 9.48 ரூபாயும் சுங்க வரியாக வசூலித்து வந்தது. மோடி அரசோ கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு ஏற்ப சுங்க வரியை உயர்த்தியது. அதன் விளைவாக டீசல் மீதானவரி ரூ.3.46 யிலிருந்து ரூ.17.33 ஆகவும், பெட்ரோல் மீதான வரிரூ.9.48 யிலிருந்து ரூ.21.48 ஆகவும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து சில வட மாநி லங்களில் சட்டமன்ற தேர்தல் கள் வந்தபோது ரூ.2 வரியை குறைத்தனர். அதுபோல் கடந்த மாதம் நடந்த கர்நாடக சட்ட மன்ற தேர்தலின் போது தொடர்ந்து 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படா மல் பார்த்துக்கொண்டனர்.

கச்சா எண்ணெய் விலை குறைவால் லாப விகிதம் குறைந்து விட்டதாக எண் ணெய் நிறுவனங்கள் கூறின. உடனடியாக எண்ணெய் நிறுவ னங்களின் லாப விகிதம் 10 லிருந்து 16 சதவீதமாக உயர்த் தப்பட்டது. ஆனால் மக்கள் எந்தவகையிலும் நிவாரணம் பெறமத்திய பாஜக அரசு உதவ வில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner