எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரவினைப் பின் வாங்கியது மத்திய அரசின் கல்வித் துறை

டில்லி, ஜூன் 19 தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ரத்து உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டாராம். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழில் எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத மொழிகளில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்றும் வெளியான தகவல்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டுமானால் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சி பெற வேண்டும். கடந்த ஆண்டு வரை 20 மாநில மொழிகளில் நடைபெற்று வந்த தகுதி தேர்வு இந்த ஆண்டு, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே நடைபெறும் என்றும், தமிழ் உள்பட 17 மாநில மொழிகள் நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாது.

இதனை அடுத்து திராவிடர் கழகத்தலைவர் உடனடியாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந் நிலையில் தமிழ் உள்பட 20 மாநில மொழி களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.  தனது உத்தரவை ரத்துசெய்யக்கோரி மத்திய பள்ளிக்கல்வி தேர்வு வாரியத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner