எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஜூன் 19 மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 16.6.2018 அன்று இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் தவிர மற்ற அனைத்து மாநில மொழிகளில் தேர்வு எழுதமுடியாது என்று உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கடுமையான கண்டன அறிக்கை வெளியிட்டார். அதே போல் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியும் சமூகவலைதளத்தில் தனது கண்டனத்தைப் பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து சிபிஎஸ்இ வெளியிட்ட ஆணையை ரத்து செய்தும், மீண்டும் அனைத்து மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்றும் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் இந்தியாவின் 92 நகரங்களில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வான சிடிஇடி (Central Teacher Eligibility Test)  தேர்வு நடைபெறுவதாக மே மாதம் 30-ஆம் தேதி சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியிட்டிருந்தது. இந்த தேர்விற்கு ஜூன் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இன்று திடீரென்று ஜூன் 22 ஆம் தேதி என்று அறிவித்த விண்ணப்பிக்கும் தேதியை ரத்து செய்துள்ளது, தேர்விற்காக விண்ணப்பிக்கும் தேதி எப்போது  என்று கூறப்படவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner