எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 19- இந்தியா வில், அய்போன் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் தள்ளுபடியில் விற்கப்படுவதை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அய்போன்களுக்கு இந்தியச் சந்தையில் மவுசு அதிகம். பல நாடுகளில் அய்போன் விற்பனை சரிந்தபோதும், இந்தியாவில் விற்பனை பாதிக்கவில்லை.  இதனால் இந்தியச் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தத் தொடங்கியது.

இந்த நிறுவனத்தின் இந்தி யாவுக்கான தலைவராக மைக் கேல்  கோலாம்ப் நியமிக்கப்பட் டார். இதன்பிறகு, இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்ப தற்கு புதிய உத்தியை ஆப்பிள் நிறுவனம் கையாளத்  தொடங் கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத் தயாரிப் புகளில் அய்போன்கள் விற்பனை தான் இந்தியாவில் அதிகம். 55 சதவீதம் ஆன்லைனில் விற்ப னையாகிறது. அதிரடி  தள்ளு படிகள்தான் இதற்கு காரணம். தவிர, பல ஏஜென்சிகள் ஆப் பிள் நிறுவன தயாரிப்புகளை விற்கின்றன. இவற்றில் விற்ப னைச் சரிவைச்  சந்தித்துள்ள சிலவற்றை கழற்றிவிட ஆப் பிள் முடிவு செய்துள்ளது.

ஏஜென்சிகளின் எண்ணிக் கையைக் குறைத்து, விற்பனை மற்றும் விலை  நிர்ணயத்தில் கெடுபிடியைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நிறுவன வட் டாரங்கள் கூறுகையில், ஆப் பிள் தயாரிப்புகளுக்கு கவுரவம் கொடுப்பது அதன் விலையும் தான். தள்ளுபடிகள் தயாரிப் பின்  மதிப்பை குறைத்து விடு கின்றன.  ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களிடையே விலை வேறுபாட்டைப் போக்க நட வடிக்கை எடுக்கப்படும் எனத்  தெரிவித்தன.