எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 20- தமிழகம் உள்பட நாடு முழுவதும் செவ் வாய்க்கிழமை 2-ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இந்நிலையில், டீசலுக்கு மாநில அரசுகள் விதித்து வரும் வரியை குறைத் தால் போராட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் கள் சம்மேளனம் தெரிவித்தது.

நாடு முழுவதும் லாரி உரி மையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தை திங்கள்கிழமை தொடங் கினர். டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சுங்கச் சாவடிக ளில் அதிக கட்டணம் வசூலிப் பதை கண்டித்தும் ஏற்கெனவே லாரி உரிமையாளர்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ள னர். தற்போது டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவ தால் லாரி தொழில் நலிவ டைந்து வருவதாக லாரி உரிமை யாளர்கள் குறை கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட் டம் திங்கள்கிழமை தொடங்கி யது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர். நாடு முழு வதும் 75 லட்சம் லாரிகள் ஓடும் நிலையில், திங்கள்கிழமை சுமார் 30 சதவீத லாரிகள் இயக் கப்படவில்லை. அதேபோல் தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் லாரிகளில் 2 லட்சம் லாரிகள் இயங்கவில்லை.

ஆந்திரம், கருநாடகம் உள் ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க் கெட்டுக்கு வழக்கமாக நாள் தோறும் 600 லாரிகள் வருவ துண்டு. ஆனால் திங்கள்கிழமை 400 லாரிகளும், செவ்வாய்க் கிழமை 200 லாரிகளும் மட் டுமே வந்தன. இதனால் காய் கறி வரத்து பெரிதும் குறைந்து உள்ளதாக வியாபாரிகள் கூறு கின்றனர். அதேபோல் தமிழகத் தில் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் மளிகை பொருள்கள், மஞ்சள், ஜவுளி உள்ளிட்டவையும் தேக்கம டைய தொடங்கியுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மே ளன தலைவர் ஆர்.சுகுமார் கூறியது: எங்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து, டீசலுக்கு மாநில அரசுகள் விதிக்கும் வரியை 2 அல்லது 3 சதவீதம் குறைத்தால் கூட வேலைநிறுத் தத்தை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை திட்டமிட்டப் படி போராட்டத்தை நடத்திச் செல்வோம் என்றார் சுகுமார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner