எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூன் 20 எதிர்வரும் மக்களவைத் தேர்தலை ஒட்டி பல்வேறு முக்கியப் பிரமுகர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் பாஜகவின் நடவடிக் கையை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். இத்தகைய சந்திப்புகள் வெறும் நிழற்படம் எடுத்துக் கொள்வ தற்கான வாய்ப்புகளை வேண்டு மானால் உருவாக்குமே தவிர வேறு எந்த பலனையும் அளிக் காது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப் பேற்று நான்கு ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில், அதைக் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளையும், சாதனை விளக்கக் கூட்டங்களையும் நடத்த அக்கட்சி திட்டமிட்டது.

அதன்படி, பாஜகவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச் சர்கள், எம்எல்ஏ, எம்.பி.க்கள் ஆகியோர் சமூக பிரபலங்கள் 1 லட்சம் பேரிடம் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் திட் டங்களையும், செயல்பாடு களையும் விளக்கிக் கூறி அடுத்த தேர்தலுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியது.

இதையடுத்து, கூட்டணி கட்சி தலைவர்கள், மூத்த அரசி யல் தலைவர்கள், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத் தாளர்கள் ஆகியோர்களை பாஜகவினர் சந்தித்து வருகின் றனர். இந்நிலையில், அந்த நட வடிக்கையை மாயாவதி விமர்சித் துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி ருப்பதாவது:

ஏழைகள், சாமானியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர்தான் இந்த தேசத்தை கட்டமைப்பவர்கள். அவர்களை விடுத்து உயர்ந்த தகுதியில் இருப்பவர்களை பாஜக தலை வர்கள் சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே எளிய மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பாஜக கொண்டிருக்கிறது என் பதை உணர முடிகிறது.

இதுபோன்ற சந்திப்புகள், பிரபலங்களுடன் நிழற்படம் எடுத்துக் கொள்வதற்கு சந்தர்ப் பத்தை ஏற்படுத்தித் தரலாம். மாறாக வேறு எந்த பலனையும் பாஜகவுக்கு அளிக்காது என்று அந்த அறிக்கையின் வாயிலாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner