எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

லக்னோ, ஜூன் 21 பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில், மேலும் ஒரு இஸ்லாமியர் பசு குண்டர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட இசுலாமியர், பசுவை வதைத்தார் என்று நடக்காதஒரு சம்பவத் தை கூறி இந்த படுகொ லையை பசு குண்டர் கள் அரங்கேற்றியுள் ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டிற்கு அருகில் பஜீரா குர்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காசிம் (வயது 45) மற்றும் அவரது நண்பர் சமயதீன் (வயது 55). இவர்கள் தங்களின் வயலில் புகுந்த ஒரு பசுவை விரட்டியுள்ளனர்.

ஆனால், இவர்கள் பசுவைக் கடத்த முயற்சிப்பதாக, வதந்தி பரப்பிய பசு குண்டர்கள், சுமார் 30-க்கும்மேற்பட்டோருடன் சென்று, வயலில்நின்று கொண்டிருந்த காசிம், அவரது நண்பர் சமயதீன் ஆகியோர் மீது உருட்டுக் கட்டைகளால் மிகக்கொடூர மாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் காசிம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்ட நிலையில்,அவரது நண்பர் சமயதீன் ஆபத்தானநிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீண்டநேரமாக நடந்த இத்தாக்குதலைப் பற்றி தகவலறிந்து, உறவினர்களும், காவல்துறையினரும் வந்தே, பசு குண்டர்களிட மிருந்து காசிமின் உடலையும், சமயதீனையும் மீட்டுள்ளனர்.காசிம் படுகொலைச் சம்பவம், காணொலி பதிவாகவும் வெளி யானதால், உத்தரப்பிரதேசத்தில் அதுதற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரு கும்பல் காசிமையும் அவரதுநண்பரையும் தாக்குவது, தாக்கப் பட்டவர்கள் கீழே விழுந்து கிடப்பதுஆகிய காட்சிகளுடன், தாக்குதலின்போது, அந்த வெறிக்கும்பல், பசுவதைக்கு இது சரியான தண்டனை என்று கூச்சலிடுவது வீடியோ காட்சியாக பதிவாகியுள் ளது. சாகும் நிலையில், காசிம் தண்ணீர் கேட்கிறார்; ஆனால், தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று சிலர் கூறுவதும் அந்த காட்சியில் இடம் பெற்றுள்ளது.

பாஜகவை எதிர்ப்பவர்களோடு

இணைந்து நிற்பேன்

ரோஹித் வெமுலாவின் தாயார் பேச்சு

அய்தராபாத், ஜூன் 21- பாஜக-வினர் எவ்வளவு பொய்ச் செய்திகளைப் பரப்பினாலும், பாஜகவுக்கு எதிரானவர்களோடு இணைந்துநிற்பேன் என்று, ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்தவர் ரோஹித் வெமுலா. தலித் மாணவரான இவர், பல்கலைக்கழகத்தில் இழைக்கப்பட்ட சாதிய பாரபட்சத்தால், கடந்த 2016-ஆம்ஆண்டு பல்கலைக்கழக விடுதியிலேயே தூக்குப் போட்டு தற்கொலைசெய்து கொண்டார். ரோஹித் வெமுலாவின் மரணத்தில் பாஜக மத்திய அமைச்சர்களான ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் அப்போது குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்நிலையில், ரோஹித் வெமுலாவின் தாயார் வறுமையில், வாடகை வீடுஒன்றில் வசித்து வரும் நிலையில், அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவித்தது.

ஆனால், அந்த நிதியை வழங்காமல் முஸ்லிம் லீக் மோசடி செய்து விட்டதாக, அண்மையில் பாஜக-வினர் வதந்தியைக் கிளப்பி விட்டனர். இது பரபரப்பாகவும் பேசப்பட்டது.முஸ்லிம் லீக் தலைவர் முனீர், இதுதொடர்பாக அளித்த பேட்டியில், நாங்கள் அளித்த காசோலை திரும்பி வந்த தகவல் எங்களுக்கு தெரியாது: எனினும் கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டோம் என்றார். இதனிடையே, வெமுலாவின் தாயார் ராதிகாவே இப்பிரச்சனை தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள் ளார்.

அதில், முஸ்லிம் லீக் வழங்கிய காசோலையில் எழுத்துப்பிழை இருப்பதாகத்தான் அது திரும்பி வந்ததே தவிர,வங்கியில் பணம் இல்லாமல் அல்ல என்று கூறியிருப்பதுடன், திரும்பி வந்தது ரூ. 5 லட்சத்திற்கான காசோலைமட்டும்தான்; ரம்ஜானுக்குப் பின்னர் ரூ. 10 லட்சம் தருகிறோம் என்றுதான் ஏற்கெனவே அவர்கள் கூறியிருந்தனர்; எனவே, இதில் மோசடி எங்கே இருக்கிறது? என்றும் கேட்டுள்ளார்.

பாஜகவினர் பொய்யைப் பரப்பிஅரசியல் ஆதாயம் தேட முயன்றாலும், எப்போதும் தான் பாஜகவுக்கு எதிரானவர் களுடனேயே இணைந்து நிற்பேன்என்றும் ராதிகா வெமுலா தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner