எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 21 -பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றவர்களுக்கு, மகாராஷ்டிராவில் சுட்டுக்கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே படுகொலையிலும் தொடர்பு இருப்பதாக பெங்களூரு சிறப்பு புலனாய்வுப்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி பெங்ளூ ருவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இப்படுகொலையையொட்டி அமைக்கப்பட்ட பெங்களூரு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், நீண்ட தேடுதலுக்குப் பின்னர், பெங்களூ ருவில் துப்பாக்கிகளை விற்க முயன்ற நவீன் குமார் (37) என்பவரை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின் அடிப்படை யில் கடந்த வாரம் பரசுராம் வாக்மோர் (26), பிரவீன் குமார் (37), அமுல் காலே (39), அமித் திக்வேகர் (39), மனோகர் எட்வே (28) ஆகியோரையும் கைது செய்தனர்.

இதில் பரசுராம் வாக்மோர் என்பவர், முத்தாலிக் தலைமையிலான சிறீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. பிரவீன் குமார், அமுல் காலே, அமித் திக்வேகர் ஆகியோர் சனாதன் சன்ஸ்தான் என்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், வாக்மோர் உள் ளிட்டோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப் படையில், கவுரி லங்கேஷ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களே, மகாராஷ்டிரத்தில் இடதுசாரி சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே-வையும் கொலை செய்திருக்க வேண்டும் என்று பெங்களூரு சிஅய்டி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.

இந்துத்துவ அமைப்பினருடன் நெருங்கிய தொடர்புகொண்ட பிரவீன் குமார், சனாதன் சன்ஸ்தான் அமைப்பு வழங்கும் வேலையை செய்பவர். இவர் கவுரி லங்கேஷை கொலை செய்ய, ஆப்ரேஷன் அம்மா என்ற திட்டத்தை தீட்டி, நவீன் குமாரிடம் ஆயுதங்களை வாங்கியுள்ளார். பின்னர் பரசுராம் வாக்மோரிடம் ரூ. 13 ஆயிரம் கொடுத்து, இந்து மதத்துக்கு எதிராக பேசும் கவுரி லங்கேஷை சுட்டுக்கொல்லுமாறு கூறி யுள்ளார்.

இதற்காக பரசுராம் வாக்மோர், அமித் திக்வேகர், மனோகர் எட்வே, அமுல் காலே உள்ளிட்டோரை பெங்களூரு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர். இவர்கள் கவுரி லங்கேஷை 15 நாட்கள் வேவு பார்த்துள்ளனர். பின்னர்தான், பரசுராம் வாக்மோர் லங்கேஷை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் அந்த துப்பாக் கியை பிரவீன் குமாரிடம் கொடுத்துவிட்டு, பீஜப்பூர் தப்பிச் சென்றுள்ளார்.

எழுத்தாளர் கே.எஸ். பகவான், கிரீஷ் கர்னாட் ஆகியோரைக் கொலை செய்யவும் அமுல் காலே திட்டம் தீட்டி இருக்கிறார். காவல்துறையினரின் கெடுபிடி அதிகரித்த தால் அமுல் காலே பூனேவுக்குச் சென்று தங்கியுள்ளார். அப்போது கவுரி லங்கேஷை கொன்ற பரசுராம் வாக்மோரும் பூனே சென்று அமுல் காலேவைச் சந்தித்து பேசியுள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் போது எம்.எம். கல்புர்கி, கோவிந்த் பன் சாரே கொலை வழக்குகளிலும், பரசுராம் வாக்மோர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது என்று புலனாய்வுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, பன்சாரே கொலை தொடர்பாக, மகாராஷ்டிர காவல் துறையினர் விரைவில் பெங்களூரு வந்து, கவுரி லங்கேஷ் வழக்கில் கைதாகியுள்ள 6 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner