எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஜூன் 22 நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தினந்தோறும் தலையெடுத்துக் கொண்டுள்ள நிலை யில், வாரம் ஒருமுறை எந்த முக்கிய காரணமுமின்றி பிரதமர் மோடி அயல் நாடுகளுக்கு சென்றுவிடுகிறார். அதா வது பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதில் இருந்து தப்பிக்கவே அவரது வெளி நாட்டுப்பயணம் என்று சிவசேனா தனது நாளிதழான 'சாம்னா'வில் கடுமை யாக சாடியுள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரில் அதிகாரத்தைப் பிடிக்கும் பேராசையில் அந்த மாநிலத்தையே பலிகொடுத்துள்ளது என்றும் கடுமை யாக விமர்சித்துள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா கட்சி இடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவிலும் ஆளும் பாஜக வுடன் கூட்டணியில் உள்ளது. இந் நிலையில், மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளின் செயல்பாடுகளை சிவசேனா தொடர்ந்து விமர்சித்து வரு கிறது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர் தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும், சிவசேனா சமீபத்தில் அறிவித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து 3 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த  நிலையில் திடீரென்று பாஜக தனது கூட்டணியை முறித்து கொண்டது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்த நிலையில்,  சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாஜகவை கடுமை யாக குற்றம் சாட்டியுள்ளது. அதில், "ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்தால், தீவிரவாதத்தை ஒழித்து விடுவோம் என்ற வாக்குறுதியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.ஆனால், பயங்கர வாதத்தையும், வன் முறையையும் தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றவுடன், மக்கள் ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறிவிட்டது. பாஜக, காஷ்மீர் முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்து விட் டுள்ளது. மேலும், முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு தற்போது காஷ் மீரில் மிக மோசமான சூழல் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத வகை யில் அங்கு ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ராணுவ வீரர்கள் பயங் கரவாதத்திற்கு பலியாகியுள்ளனர். ஆனால் எல்லாவற்றிற்கும் காரணம் மெகபூபா முப்தியின் கட்சி தான் காரணம் என பாஜக குற்றம் சாட்டி கூட்டணியிலிருந்து வெளியேறிவிட் டது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க வேண்டும் என நினைத்து அங்கு பல் வேறு அராஜகங்களை கட்டவிழ்த்து விட்ட பாஜகவின் பேராசையை வர லாறு ஒருபோதும் மன்னிக்காது" என்று கூறியுள்ளது.

மேலும், "அங்கு நடந்த அனைத்து கலவரங்களுக்கும், பாஜகவும் மிக முக்கிய காரணம்; ஆனால் மக்களை ஏமாற்றும் வேலையாக முப்தி மெக பூபா மீது பழியைப் போட்டு ஆட் சியைக் கவிழ்த்துவிட்டனர். காஷ்மீரில் முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங் கிரஸ் நடத்தி வந்த ஆட்சியே பரவாயில்லை என மக்கள் நினைக்கின்றனர். காஷ்மீர் மக்கள் ராணுவ வீரர்களைத் தாக்குகின்றனர். பயங்கரவாதிகள் ராணுவ நிலைகளைத் தாக்குகின்றனர். ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் தங்களது உயிரை பறிகொடுத்து வரு கின்றனர்.

பணமதிப்பு நடவடிக்கை மூலம் அனைத்து பிரச்சினைகளும் தீவிரவாதம் உட்பட தீர்ந்துவிடும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதற்குப் பிறகு தான் தீவிரவாத நடவடிக்கைகள் பல்லாயிரம் மடங்கு அதிகரித்து விட்டன. பாகிஸ் தான் ஊடுருவல்கள் அதிகரித்து போர் இல்லாத நிலையிலும் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை விட அதிகமான ராணுவ வீரர்களது உயிரி ழப்புகள் தொடருகிறது. இத்தனை யையும் தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கிறது. நாட்டை நடத்துவது ஒன் றும் சின்னப்பிள்ளை விளையாட்டு கிடையாது.  பிரதமர் மோடி யோகா செய்வது போல் போஸ் கொடுத்து லட்சக் கணக்கில் செலவு செய்து வீடியோ வெளியிடுவது, யோகாவிற் கான விளம்பரத்தூதர் போல் யோகா செய்து ஊடகங்களுக்கு படம் அனுப்பி அதைப்  பரவ விடுவது போன்றவை களிலேயே கவனம் செலுத்தி வருகின்றார். விலைவாசியைக் குறைப் பதற்கு வழி காணாமல் பொது மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் வெளி நாடு களுக்குச் சென்று விடுகிறார்" என்று "சாம்னா" நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner