எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர், உறுப்பினர்கள் நியமனம்

அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

புதுடில்லி, ஜூன் 23 உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர் களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக் கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய நீர் வளத் துறை இணைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ள தாவது:

மேலாண்மை ஆணையம்: காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன், உறுப்பினராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப் பட்டுள்ளனர். பகுதி நேர உறுப்பி னர்களாக மத்திய நீர் வளத் துறையின் இணைச் செயலர், மத்திய வேளாண்மைத் துறையின் ஆணையர், மத்திய வேளாண்மை துறையின் இணைச் செயலாளர், கர்நாடக மாநில நீர் வளத் துறை நிர்வாகச் செயலாளர், கேரள நீர் வளத் துறை செயலர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப் பணித் துறை ஆணை யரும், செயலருமான ஏ. அன்பரசு, தமிழக அரசின் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள னர். மேலும், மத்திய நீர் ஆணை யத்தின் தலைமைப் பொறியா ளரான ஏ.எஸ். கோயல், காவிரி மேலாண்மை ஆணை யத்தின் செயலராக செயல்படுவார். காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் தலைமையகம் புதுடில்லியில் செயல் படும்.

ஒழுங்காற்றுக் குழு: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறி யாளர் நவீன் குமார் நியமிக்கப்பட் டுள்ளார். இவர் இப்பொறுப்பை கூடுத லாகக் கவனிப்பார். உறுப்பினர் களாக கருநாடக மாநில நீர் வளத் துறை தலை மைப் பொறியாளர் (பெயர் அறிவிக்கப் படவில்லை), கேரள தலைமைப் பொறியாளர் கே.ஏ. ஜோஷி, புதுச்சேரி பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம், தமிழக அரசின் நீர் வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் ஆர். செந்தில் குமார், இந்திய வானியல் ஆய்வு மய்யத்தின் அறிவியலாளர் எம். மொஹபத்ரா, சிஎஸ்ஆர்ஓவின் தலை மைப் பொறியாளர் கிருஷ்ண உண்ணி, மத்திய வேளாண்மைத் துறையின் தோட் டக்கலை ஆணையர், குழுவின் உறுப் பினர் - செயலாளராக ஏ.எஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள

னர். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும் என அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner