எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 23-- ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத் தப்பட்ட பிறகு, சட்ட விரோத மான பரிவர்த்தனைகளின் எண் ணிக்கை 5 மடங்கு அதிகரித்து விட்டதாகத் தெரியவந்துள்ளது. நாட்டில் நடைபெறும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு உள்ளிட்ட நட வடிக்கைகளை தடுக் கவே பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றை கொண்டு வந்த தாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால், பண மதிப்பு நீக்கம், கறுப்புப் பணத்தை யெல்லாம் வெள்ளையாக்கியது தான் மிச்சம் என்றாகி விட்டது. இப்போது, ஜிஎஸ்டி-யின் நோக் கமும் நிறைவேறவில்லை என் பது தெரியவந்துள்ளது.

வரி ஏய்ப்பு தடுக்கப்பட வில்லை என்பதோடு, முன்பை விட சட்டவிரோத பரிவர்த்த னைகள் அதிகரித்துவிட்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கட்டுமானத் துறை யில், பில்களை (ரசீதுகள்) விற் பனை செய்வது வழக்கம் என் றாலும், ஜிஎஸ்டி அமல்படுத் தப்பட்ட பிறகு பில் விற்பனை முறை ஐந்து மடங்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. கட் டுமானப் பொருள் உற்பத்தியா ளர் ஒருவரிடமிருந்து, முறை யாக வரி செலுத்தி சரக்குகளைப் பெறும் ஒருடீலர், இதற்கான ரசீதை,வேறொரு தனியார் கட்டுமான நிறுவனத்திடமோ, அரசு ஒப்பந்ததாரரிடமோ விற் பனை செய்வதாகவும், அந்த ரசீதை வாங்குபவர்கள் வேறொரு உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களைக் குறைவான விலைக்குவரி செலுத்தாமல் வாங்கிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்தது என்றாலும் ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்ட பிறகு இந்த நடவடிக்கைகள் நான்கு முதல் ஐந்து மடங்காக உயர்ந்துவிட்டது என்று கூறப் படுகிறது. இவ்வாறு ஜிஎஸ்டி வரி செலுத்தி, பொருட்களை வாங் கிய சில சில்லறைவர்த்தகர்கள், டீலர்ஷிப்பில் நடக்கும் வரி ஏய்ப்பைப்பயன்படுத்தி, அவர் களிடமே குறைவான விலை யில் பொருட்களை வாங்கிக் கொள்வதாகவும் இப்பொருட் கள் எந்தவிதத் தடையுமின்றி மாநிலங்களுக்கு இடையே இடமாற்றம் செய்யப்படுவதாக வும் மின்னணு சரக்கு உற்பத் தியாளர்கள் கூறுகின்றனர்.