எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் சாமியார் ஆதித்யநாத்  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அர்தோய் பகுதிக்கு வரவிருப்பதையடுத்து நிகழ்ச்சி அரங்கம் ஒன்றின் கழிப்பறை, காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச முதலமைச்சராக பாஜக வின் சாமியார் ஆதித்யநாத் பதவியேற்றது முதல் அம்மாநிலம் முழுவதும் காவி மயமாகி வருகிறது.  அரசு அலுவலகங்கள், பள்ளிகள், காவல் நிலையங்கள் என அனைத்திற்கும்  மாநில அரசு காவி வண் ணத்தை பூசி வருகிறது.

சாலையைப் பிரிக்கும் பகுதிகளுக்கு கூட காவி நிறம் அடிக்கப்பட்டு வருகிறது, பெரியார் சிலை உடைப்பு - அதன்பிறகு உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு. இதற்கு வருத்தம் தெரிவித்த அம்மாநில அரசு அம்பேத்கர் சிலைக்கு காவிவண்ணம் பூசிய புதிய சிலையை வைத்தது.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச் சையானது. அரசியல் கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததால் பின்னர் அம் பேத்கர்  சிலைக்கு நீல நிறத்தை பூசினர்.

இப்படி எங்கும் காவி மயமாக காணப்படும் உத்தரப் பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் காவி நிறமே  பிரதானமாக இருக்கும். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில், ரஷ்கான் அரங்கத்தில் அரசின் நலத்திட்ட உதவி களை வழங்கும் விழாவில் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டார். அந்த விழாவில் யோகியின் வருகையையொட்டி விழா மேடை, தோரணங்கள் எல்லாம் காவி நிறத் திலும், காவி நிற திரைச்சீலை, காவி நிறப் பட்டைகள் என எல்லாம்

காவியாக காட்சி யளித்தது.

அங்கு யோகி ஆதித்யநாத் சுமார் 8 மணி நேரம் மட்டுமே தங்கவுள்ள அரங்கத்

தின் சுவர்களில் காவி நிறப்பட்டைகள் வரையப்பட்டு, காவி நிற திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இதன் உச்சமாக அங்குள்ள கழிவறை சுவர்களில் இருந்த வெள்ளை நிற பதிப்புக் கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவி நிற பதிப்புக்கள்  பதிக்கப்பட்டன. தற்போது இதுவும் பெரும் சர்ச்சையாக மாறிவருகிறது. ஏற்கெனவே அரசு நிதியில் கட்டப்பட்ட கழிவறைகளுக்கு கூட காவி நிறத்தை பூசியது சர்ச்சையாக இருந்தது.

ஆனாலும் தொடர்ந்து யோகி ஆதித்ய நாத் இத்தகைய செயல்களை ஊக்கப்படுத்தி வருகிறார். தற்போதைய நிலையில் அங்கு வானம் மட்டுமே நீல நிறத்தில் காட்சி யளிக்கிறது, கைக்கெட்டும் தூரத்தில் வானம் இருந்திருந்தால் அதற்கும் காவிவண்ணம் பூசியிருப்பார்களோ!