எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-2018ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 4 ஆண்டுகளில் மிகவும் குறைவான வளர்ச்சி இதுவாகும்.

2016-17ஆம் நிதியாண்டில் விவசாய உற்பத்தி 4.5 விழுக்காடாக இருந்தது, அதே போல் கட்டுமானம்  9.1 விழுக்காடும் இதர துறைகளில் 11.5 விழுக்காடு என்ற ரீதியில் வளர்ச்சி இருந்தது. மேலும் இந்த அரசு ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து தவறிழைத்து வருகிறது, இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5விழுக்காடு குறைந் துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.5 விழுக்காட்டில் இருந்து 6.5விழுக்காடு ஆக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும் என, மத்திய புள்ளியியல் துறை அலுவ லகத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் வளர்ச்சி 7.1 விழுக்காட்டில் இருந்து 2017-18ஆம் ஆண்டில்  6.5விழுக்காடு குறைந்துவருவதாக கூறி உள்ளது. கடந்த 2016-17ஆம் ஆண்டு 5.7 விழுக்காட்டில் இருந்து 7.3 விழுக்காடாக உயரும் என எதிர்பார்த்த நிலையில் 7.1 விழுக்காடாக உயர்ந்தது. தற்போது குறைந்ததுவிட்டது.

இந்தியாவின் வளர்ச்சி கீழ் நோக்கி சென்றிருப்பது கவலை அளிக்கிறது. நாட் டின் வளர்ச்சியை பணமதிப்பிழப்பு தடுத்து நிறுத்திவிட்டது என்று உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுண ரும், தற்போதைய நியூயார்க் மற்றும் இதாகா கார்நல் பல்கலைக்கழக பொருளாதார துறை பேராசிரியருமான கவுசிக் பாசு தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் பிடிஅய் செய்தி நிறுவனத்திடம் மேலும் கூறுகையில், இந்த மிகப்பெரிய விலையை பணமதிப் பிழப்பு முடிவுக்காக நாடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் முதுகெலும்பு முறிந்து விட்ட நிலையில் உள்ளது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து ஏற்கெனவே ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.  நாட்டின் ஜிடிபி 10 விழுக்காடு வந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மேலும் நமது நாட்டினர் கலாச்சாரம், வரலாற்றுத் தொன்மை ஆகியவை குறித்து பிற உலக நாடுகளுக்கு இந்தியா உபதேசம் செய் யலாம். ஆனால், பொருளாதார வளர்ச்சி யில் நாம் மற்றவர்களுக்கு பாடம் சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். இந்த நிலையில் இந்தியாவை வளர்ந்த நாடுக ளுடன் ஒப்பிட்டுப் பேசுவது தேவையற்ற ஒன்றாகும் என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner