எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எஸ்.சி.,எஸ்.டி. மக்கள் மீதான

காவல்துறை அத்துமீறல்

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் மீதான காவல்துறை அத்துமீறல்களில், பாஜக ஆளும் மாநிலங்களே முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையின் செயல்திறனை அறியும் விதமாக, தேசிய குற்றவியல் ஆணையம், நாடு முழுவதும் 22 மாநிலங்களில் கணக் கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. 15 ஆயிரம் பேர் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்று, காவல்நிலையத்தில் காவல் துறையினர் நடந்து கொள்ளும் விதம், காவல்துறையினரால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பில்தான், பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமான தாழ்த்தப்பட்ட வர்கள்  பழங்குடியினர் காவல்துறை அத்து மீறலுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்து உள்ளது.

பாஜக ஆளும் ராஜஸ்தானில், 78 சத விகிதம் பழங்குடி மக்களும், குஜராத்தில் 54 சதவிகிதம் பழங்குடி மக்களும் காவல்துறை சித்ரவதைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதேபோல சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்டிரா, அசாம், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களும், தங்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகா ராஷ்ட்டிரா, பீகார் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வர்களும் காவல்துறையால் அதிகம் பாதிக் கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். காங் கிரசு ஆளும் பஞ்சாப், ஆம் ஆத்மி ஆட்சி யிலிருக்கும் டில்லி, தெலுங்கானா ராஷ்ட் ரிய சமிதி ஆட்சி நடத்தும் தெலுங்கானா மாநிலங்களிலும் காவல்துறை ஒடுக்குமுறை அதிகளவில் இருப்பதாக தாழ்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.