எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டில்லி ஜூன் 24 அமித்ஷா இயக்குநராக உள்ள கூட்டுறவு வங்கியில் 745.59 கோடிக்கு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் டிபாசிட் செய்யப்பட்டது இது தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகிவரும் நிலையில் காங்கிரசு தலைவர் ராகுல் இதுகுறித்த செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், 'வாழ்த்துகள்! அமித்ஷா ஜி.' நீங்கள் இயக்குநராக இருக்கும் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிதான், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதிகளவு பணத்தை அதாவது ரூ.745.59 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை 5 நாட்களில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி முதல் பரிசு பெற்றுள்ளது.

மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் அழிக்கப்பட்டது, உங்க ளுடைய சாதனைக்கு சல்யூட்' என குறிப்பிட்டுள்ளார். பணமதிப் பிழப்பு நடவடிக்கையின் போது இந்தியாவிலேயே அதிக நோட்டுகளை மாற்றியது அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கி தான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இயக்குநராக பதவி வகித்து வரும் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்தபோது, 5 நாட்களில் ரூ.745.59 கோடி செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner