எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆமதாபாத், ஜூன் 24- பால்வெளி மண்டலத்தில் சூரியனைப் போன்று நட்சத்திரத்தைச் சுற்றி வரும், புதிய கோள் ஒன்றை ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் (இஸ்ரோ) வெளியிட்ட செய்தி: ஆமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடத் தைச் (பிஆர்எல்) சேர்ந்த பேராசிரியர் அபிஜித் சக்கரவர்த்தி தலை மையிலான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவினர் புதிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

சனிக் கிரக பாதைக்கு கீழும், நெப்டியூன் கிரகப் பாதைக்கு மேலும் இருக்கக்கூடிய அளவுள்ள, சூரியனைப் போன்று நட்சத் திரத்தைச் சுற்றி வரும், இந்தப் புதிய கோள் பூமியின் எடையைப் போன்று 27 மடங்கு பெரிதாகவும், பூமியின் ஆரத்தைப் போல 4 மடங்கு அதிகமும் கொண்டது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1.2 மீட்டர் தொலை நோக்கியுடன் கூடிய பி.ஆர்.எல். மேம்பட்ட தேடல் (பாராஸ்) கருவியின் உதவியுடன் கோளின் எடையளவைக் கணக்கிட்டு இந்தப் புதிய கோள் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாராஸ் நிற மாலைக் கருவிதான் ஆசியாவிலேயே முதலாவதாகும்.  இது போன்ற, துல்லியமான அளவீடுகளைத் தரக்கூடிய வெகு சில நிற மாலை கருவிகளே உலகில் உள்ளன. சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றி, கோள்கள் உருவாவதைப் புரிந்து கொள்ளவும் இந்தக் கண்டுபிடிப்பு உதவும்.

இந்தக் கண்டுபிடிப்பு மூலம், நமது சூரியக் குடும்பத்துக்கு அப்பாற்பட்டு நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள கோள்களைக் கண்டுபிடிக்கும் திறனுள்ள ஒரு சில நாடுகளுடன் இந்தியாவும் இப்போது சேர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.