எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஜூன் 24- பிர தமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பிய கேரள முதல்வர் பினராய் விஜ யனுக்கு 4ஆவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பிரனாய் விஜயன் தலைமையில் இடது முன்னணி அரசின் ஆட்சி உள்ளது. கடந்த பல வருடங் களாகவே கேரளாவில் கம்யூ னிஸ்ட் கட்சிகளுக்கும், பாஜக வுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதன் கார ணமாக இரு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கொல் லப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி கேரளாவுக்கு வரும் போதெல்லாம் கம்யூனிஸ்ட் அரசையும், பினராய் விஜயனை யும் தாக்கி பேசுவது வழக்கம். இதேபோல், முதல்வர் பினராய் விஜயனும், மத்திய அரசை அடிக் கடி குறை கூறுவது உண்டு.

இந்நிலையில், கேரளா வுக்கு வழங்கப்பட்டு வரும் ரேசன் அரிசி வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நேரில் சந் திக்க வேண்டும் என்றும் பிரத மர் அலுவலகத்துக்கு பினராய் கடிதம் அனுப்பினார். ஆனால், தற்போது பிரதமரை சந்திக்க முடியாது என்றும், இது தொடர் பாக உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை சந்தித்து பேசலாம் என்றும் கூறி பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. ஏற் கெனவே, 2016இல் பணமதிப் பிழப்பு நடவடிக்கையின் போதும், அதைத் தொடர்ந்து கேரள வறட்சி நிலவரம் பற்றியும் பேச முயன்றபோது பினராய் விஜயனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இதேபோல், கடந்த வாரம் டில்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கெள்ள டில்லி சென்றார். அப் போது பிரதமரை சந்திக்க அனு மதி கோரப்பட்டது. அப்போ தும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கிடையே, பாலக்காட் டில் ரயில் பெட்டி தொழிற் சாலை அமைக்க இருந்த திட் டத்தை மத்திய அரசு கைவிட முடிவு செய்திருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் உள்ள ரயில் பவன் தலைமையகம் முன்பாக முதல்வர் பிரனாய் விஜயன் தலைமையில் இடதுசாரி எம்பி.க்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அப் போது பேசிய பிரனாய் விஜ யன், கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சி நடக்கிறது என்பதற்கா கவே மத்திய அரசு வஞ்சிக்கி றது. கேரள மக்கள் புறக்கணிக் கப்படுகிறார்கள். இதுதான் கூட்டாட்சியா? என்றார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner