எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஜூன் 24 ஆதார் அடையாள அட்டைக்காக மக்க ளிடம் அவர்களுடைய பயோ மெட்ரிக் தகவல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஅய்டிஏஅய்) சேகரித்தது. அந்த தகவல்கள் குற்றவியல் விசார ணைக்காக பயன்படுத்தப்படுவ தாக தகவல்கள் வெளியானது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் ஈஷ் குமார் குறிப்பிட்ட ஆதார் தக வல்கள் காவல்துறைக்கு விசார ணைக்காக கொடுக்கவேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இதற்கு பதில ளிக்கும் வகையில் யுஅய்டிஏஅய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளது. அதில் கூறியிருப்பதாவது,

“ஆதார் சட்டம் 2016, பிரிவு 29-இன் படி சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆதாரை உருவாக்க வும், ஆதார் வைத்திருப்பவர் களுக்கு அதனை அங்கீகரிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும். பிரிவு 33-இன் படி அமைச்சரவை செயலாளர்கள் தலைமையிலான குழு ஒப்புதல் வழங்கிய பிறகு தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட மிகவும் குறிப்பிட்ட சில வழக்கு களுக்கு மட்டுமே பயோமெட்ரிக் தகவல்கள் பயன்படுத்த அனு மதிக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வரும் வழக்கில் கூட இதே நிலைப்பாட்டை தான் எடுக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சட்டரீதியிலான இந்த நிலை இருப்பதால் யுஅய்டிஏஅய் பயோமெட்ரிக் தகவலை எந்த குற்றவியல் விசாரணை நிறுவ னத்துக்கும் வழங்கவில்லை என்பது தெரிகிறது.

மும்பை நீதிமன்றம் குறிப் பிட்ட ஒரு வழக்குக்காக பயோ மெட்ரிக் தகவலை ஒரு விசா ரணை நிறுவனத்திடம் வழங்கு மாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்காக சென்றது. அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது” என்று குறிப் பிடப்பட்டிருந்தது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner