எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 24 -உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் வலி யுறுத்தியுள்ளார்.

மத்திய பாஜக அரசு நீதித் துறை நடவடிக்கைகளில் தலை யிட்டு அதிகாரம் செலுத்துவதாக வும், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய அரசுக்கு அடிபணிந்து நடந்து கொள்வதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் செலமேஸ்வர். உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய் வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று கூறியதுடன், நீதிபதி பி.எச். லோயா மரணம் தொடர்பான வழக்கு, மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கு ஆகியவற்றில் தலைமை நீதிபதி யின் நடவடிக்கைகள் ஏற்கும் படியாக இல்லை என்றும் செலமேஸ்வர் அதிரடி கிளப்பி யவர்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான இவர், வெள்ளிக் கிழமையுடன் ஓய்வு பெற்றார்.

முன்னதாக, தனக்கு வழங் கப்பட்ட அரசு இல்லத்தை அதிகாலையிலேயே காலிசெய்த செலமேஸ்வர், பணி ஓய்வுபெற் றால் ஒரு நாள் கூட டில்லியில் இருக்கக் கூடாது என்ற தனது கொள்கையின் அடிப்படையில் டில்லிநகரை விட்டும் உடனடி யாக கிளம்பினார்.

இதனிடையே, செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை செல மேஸ்வர் அளித்தார். அதில், என் கடமையை, எனக்குள்ள திறமைக்கு உட்பட்டு செய்திருக் கிறேன்; ஏற்கெனவே கூறியிருந்தது போல, ஓய்வுபெற்ற உடனேயே எனது சொந்த ஊருக்குப் புறப்பட்டு விட்டேன்; எனது சொந்தஊரில் சில காலம் ஓய்வு எடுக்கத் திட்ட மிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 7 ஆண்டு கால பணியில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை; குறிப்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ் ராவுக்கு எதிராக, கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பகிரங்கமான முறையில் புகார் அளித்ததற்காக நான் வருத்தப்படவில்லை என்று செல மேஸ்வர் கூறியுள்ளார்.தான் பணிஓய்வு பெற்றுவிட்ட நிலை யில், உத்தரகண்ட் உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியான கே.எம். ஜோசப்பை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், கொலீஜியம் அவரது பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்த நிலை யில், மத்திய அரசு அதைத் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதிச்சான்று வழங்க

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner