எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 25 மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள தூய்மை நகரங்கள் பட்டியலில், திருச்சி மாநகர் 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தமி ழகத்தின் தலைநகரான சென் னைக்கு 100 ஆவது இடம் கிடைத்துள்ளது.

இதில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள் பட்டியலில் 3,707 புள்ளிகள் பெற்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்தி ருக்கிறது. கடந்த ஆண்டு ஆறா வது இடத்தில் இருந்த திருச்சி மாநகர், நடப்பாண்டில் 3,351 புள்ளிகள் பெற்று 13ஆவது இடத்தில் உள்ளது. கோவை மாநகராட்சி 3,291 புள்ளிகள் பெற்று 16ஆவது இடத்திலும், ஈரோடு மாநகராட்சி 2,857 புள் ளிகள் பெற்று 51ஆவது இடத் திலும் இருக்கிறது.மேலும் மாநில அளவிலான பட்டிய லில் ஜார்க்கண்ட் முதலிடத் தைப் பிடித்துள்ளது. தமிழகம் 13ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 235ஆவது இடத்தில் இருந்த தமிழகத்தின் தலைநகரான சென்னை, நடப்பாண்டில் 2,586 புள்ளிகள் பெற்று 100ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தூய்மை நகரங்களில் மதுரை மாநகர் 123ஆவது இடத்திலும், திண் டுக்கல் 124-வது இடத்திலும், புதுக்கோட்டை 167ஆவது இடத்திலும் உள்ளன. புதுச்சேரி நகரம் 343ஆவதுஇடத்தில் உள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner