எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூன் 25 விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் எழுதிய கட்டுரை களின் தொகுப்பான “அமைப் பாய் திரள்வோம்” என்ற நூலின் திறனாய்வுக்கூட்டம் புதுவையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் விளம்பர பேனர்கள் வைக்க ஆளுநர் தடை விதித்துள்ளனர். பிற மாநிலங்களில் கட்டணம் வசூலித்துவிட்டு குறிப்பிட்ட இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக் கப்படும் முறையை புதுவை யிலும் கடைப்பிடிக்க வேண் டும்.

தமிழக ஆளுநருக்கு எதிராக நாமக்கல்லில் அறவழியில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய தி.மு.க. வினரை காவல்துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக் கிறோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், சென்னை-சேலம் இடையே பசுமை சாலை எதிர்ப்பு போராட்டம், ஆளுநருக்கு எதிர்ப்பு போராட்டம் ஆகிய வற்றில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலை மட்டுமின்றி நச்சுத் தன்மை கொண்ட தொழிற் சாலைகளை மூடுவதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்தை கேட்டு அறிந்து திட் டத்தை நிறைவேற்ற வேண் டும். பொதுமக்கள் மீது அடக் குமுறையை அரசு மேற் கொள்ளக் கூடாது.

வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார் பில், மதசார்பற்ற கட்சிகளை இணைக்கும் மாநாடு நடத்த முடிவு வெடுத்துள்ளோம்.

மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப் படும்.

இவ்வாறு தொல்.திருமா வளவன் கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner