எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 25 செயற் கைக்கோள் தொழில்நுட்பத்தை வெளிநாட்டு மாணவர்களுக்கு கற்பிக்க இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறிய தாவது:

பன்னாட்டு அளவில் விண் வெளி விஞ்ஞானிகள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைப் பதற்காக 1968-ஆம் ஆண்டு யூனிஸ் பேஸ் என்ற அமைப்பை அய்.நா. சபை தொடங்கியது. இந்த அமைப்பில் இந்தியா அங்கம் வகிக்கிறது. இந்த அமைப்புடன் இணைந்து இந்திய- அய்.நா. சிறு செயற்கைக்கோள் திட்டத்தை வடிவமைத்துள்ளோம்.

செயற்கைக்கோள் வடிவ மைப்பில் திறன் கட்டமைப்புத் திட்டத்தை அறிவிப்பதில் இந்தியா பெருமைப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற வெளிநாட்டு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். அந்த மாணவர்கள் இந்தியாவுக்கு வந்து செயற்கைக்கோள் தொழில் நுட்பம் குறித்து நேரடியாகப் பயிற்சி பெறுவார்கள். இந்த மாணவர்கள் வடிவமைக்கப் போகும் செயற்கைக்கோள்கள் தர விதிகளுக்கு பொருந்தி வந்தால், அவற்றை இஸ்ரோ விண்ணில் செலுத்தும் என்றார் அவர்.

யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மய்யத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:

சிறு செயற்கைக்கோள் தயா ரிப்பில் குறைந்தளவு அறிவா ளுமை இருக்கும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அது குறித்து பயிற்சி அளிப்பதே இந்தத் திட் டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தில் 2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் தலா 30 வீதம் 45 நாடுகளை சேர்ந்த 90 மாண வர்கள் பயன்பெறவிருக்கிறார்கள். முதல் பயிற்சி முகாம் நவம்பரில் தொடங்கி 2 மாதங்களுக்கு நடக் கும். இதற்கான மாணவர் தேர்வு செப்டம்பரில் நடைபெறும். ஒரு நாட்டில் இருந்து 2 மாணவர் களுக்கு மட்டுமே வாய்ப்பு தரப்படும். அதில் ஒருவர் மெக் கானிக்கல் பொறியாளராகவும், மற்றொருவர் மின்னியல் பொறி யாளராகவும் இருக்க வேண்டும்.

முதல் பயிற்சி முகாமில் தலா 2 மாணவர்கள் வீதம் 15 நாடுகளைச் சேர்ந்த 30 மாண வர்கள் தேர்ந்தெடுக்கப்படு வார் கள். இவர்கள் 10 பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிக்கப் பட்டு, பயிற்சி அளிக்கப்படு வார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner