எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஜூன் 25 பாஜக தலைவர் அமித் ஷா இயக் குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பின், 5 நாட்களில் ரூ.745 கோடிக்குச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் ஆனது எப்படி, ஒரு வங்கியில் இவ் வளவு பணம் எப்படி டெபாசிட் செய்யப்பட்டது போன்ற கேள்விகளை பாஜக வுக்கும், மத்திய அரசுக்கும் சிவசேனா கட்சி எழுப்பி யுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி கொண்டு வரப்பட்ட பணமதிப்புநீக்க அறிவிப்புக்குப்பின் அடுத்த 5 நாட்களில் அமித்ஷா இயக் குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் ரூ.745 கோடிக்குச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் ஆனது என ஆர்டிஅய் மூலம் தெரியவந்தது.

இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி சிவ சேனா கட்சி தனது அதிகார பூர்வ ஏடான சாம்னாவின் தலையங்கத்தில் எழுப்பி யுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆ-ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்புநீக்க நடவடிக்கைக்கு அடுத்த 5 நாட்களில் அமித்ஷா இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட் டுறவு வங்கியில் ரூ.745 கோடிக்குச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய் யப்பட்டுள்ளன. இதேபோல குஜராத்தின் கேபினெட் அமைச்சராக இருந்த ஜெயேஷ் ராதாதய்யா தலைவராக இருக்கும் ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.693.19 கோடிக்குச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய் யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் இந்த அளவுக்கு மிக அதிகமாகச் செல்லாத ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட காரணம் என்ன?, மிகப்பெரிய தொகை எப்படி 5 நாட்களில் டெபாசிட் செய்யப்பட்டது?, இது மிகவும் கவலைகொள்ளத்தக்க, கவனிக்கத்தக்க விஷயமாகும். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

இந்த விஷயத்தின் தீவிரத் தன்மை குறித்து தற்போது தற்கால நிதி அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயலுக்கு தெரியவில்லை. நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு எல்லாம் ஒரேமாதிரியான விதி முறையை கடைப்பிடிப்பதற்கு பதிலாகக் கூட்டுறவு வங்கி களுக்கு இடையே பல்வேறு விதமான விதிமுறைகள் பின் பற்றப்படுகின்றன.

மகாராஷ்டிராவில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளி செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், டெபாசிட் செய்யவும் தடைவிதிக்கப்பட் டது. நாசிக் மாவட்ட கூட் டுறவு வங்கியில் ரூ.341 கோடி டெபாசிட் சந்தேகத்துக்கு இட மானது என்று அறிவிக்கப்பட்டு அதன்பின் டெபாசிட்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதேபோன்று நாடுமுழுவதும் மாவட்ட கூட்டுறவு வங்கி களுக்கு இடையே பல்வேறு விதிமுறைகள் இருந்ததால், மக்களிடையே பெரும் குழப் பமும், பொருளாதாரச் சீர் குலைவும் ஏற்பட்டது.

இந்த நாடு இப்போதுதான் பணமதிப்புநீக்கத்தின் தாக் கத்தை உணர்ந்து வருகிறது. இந்தக் குழப்பத்துக்கு மிகப் பெரிய காரணம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்தான். அவரை விசாரணைக்கு உட் படுத்த வேண்டும்.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை திரும்ப அழைத்து, இந்தக் குழப்பம் குறித்துக் கூறி தீர்வு காண வேண்டும். மோடியின் பணமதிப்புநீக்க நடவடிக் கைக்கு இந்த நாடு மிகப்பெரிய விலை கொடுத்துவிட்டது. அமைப்புசாரா தொழில்கள், சிறு,குறுந்தொழில்கள் ஒட்டு மொத்தமாக அழிந்துவிட்டன, வேலையின்மை அதிகரித்து விட்டது, லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து பாதிக் கப்பட்டனர்.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக கட்சி பணமதிப்புநீக்க நடவடிக்கையைக் கொண்டு வந்தபின், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிந்துவிடும், தீவிரவாதிகளுக்கு பணம் கிடைப்பது தடுக்கப்படும் என்று கூறியது. ஆனால், பிரதமர் மோடி 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதிக்கு அடுத்த நாளே ரூ.2000 கள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வந்து அதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

நாடு மிகப்பெரிய பொரு ளாதார குழப்பத்தைச் சந்தித்து வருகிறது, அதிகரித்து வரு கிறது இந்த நேரத்தில், அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிர மணியம் பதவியை விட்டு விலகி  நாட்டைவிட்டே சென்று விட்டார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் தலைமை மேலாண் இயக்குநர் உள்ளிட் டவர்களை மத்திய அரசு கைது செய்துள்ளது. இந்த வங்கி மோசடியின் முக்கியக் குற்ற வாளிகள் ஏற்கெனவே தப்பி ஓடிவிட்டனர். ஆனால், இவர் களை கைது செய்துள்ளது அரசு.மத்திய அரசின் கடின மான நடவடிக்கைக்கு வாழ்த் துக்கள்.

போலியாகக் கடன் கொடுத்த வங்கித்தலைவர்கள் எத்தனைப் பேர் இதுவரை சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்?. பாஜக தலை வர் அமித்ஷா கூட அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநர்தான். அவர் வங்கி யில் செல்லாத ரூபாய் நோட் டுகள் ரூ.745 கோடி பண மதிப்பு நீக்கத்தின் போது 5 நாட்களில் டெபாசிட் செய்யப் பட்டது.

இத்தனை குழப்பத்துக்கும் காரணமாக, பெரும் பணக் காரர்களை, தொழிலதிபர்களை வெளிநாட்டுக்குத் தப்பவிட்ட வங்கிகளின் தலைவர்கள், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் ஆகியோர் மீது தற்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் என்ன நட வடிக்கை எடுத்திருக்கிறார்?

இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner