எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுதில்லி, ஜுன் 26-- நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார். இந்த கூட்டத் தொடரில் முத்தலாக் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறை வேற்ற பாஜக அரசு திட்ட மிட்டுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரும்பாலான நாட்கள் காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்சினைகளால் முடக்கப் பட்டது. அதனால், இந்த கூட்டத்தொடர் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது. இந்த கூட்டத் தொடர் எந்தவித அமளியும் இல்லாமல் நடைபெற எதிர்க் கட்சிகளின் ஒத் துழைப்பை அரசு கோரியுள்ளது.