எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 27- உத்தரப்பிரதேசம் மற் றும் அரியானா மாநிலங்களில் மதச் சிறுபான்மையினர் குறிவைத்து என் கவுண்ட்டர் கொலைகள் செய்யப்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் எதுவும் கூறாமல் அமைதி யாக இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாமல், இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் சிறப்பு மேற்பார்வையாளர் ஹர்ஷ் மாண்டர் தன் பதவியை விட்டு விலகியிருக்கிறார்.

முன்னாள் அரசு அதிகாரியும், மனித உரிமைகள் ஆர்வலருமான ஹர்ஷ்மாண்டர், மஜா தருவாலா என்பவருடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு மேற்பார்வையாளராக 2017இல் நியமிக்கப் பட்டிருந்தார்.

சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் குறித்து கவனித்துக் கொள்ளுமாறும் அவர் மனித உரிமைகள் ஆணையத்தால் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தார்.

இவ்வாறு ஹர்ஷ் மாண்டர் நியமனம் செய்யப்பட்ட பின்பு உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் முஸ்லிம்களைக் குறி வைத்து என்கவுண்ட்டர்கள் மூலம் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது.

இவை குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் எதுவுமே கண்டுகொள்ளாமல் மிகவும் அமைதியாக இருந்துவருவதை ஹர்ஷ் மாண்டரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

எனவே, அவற்றையெல்லாம் குறிப்பிட்டு, தான் பதவிவிலகுவதாக,தேசியமனிதஉரிமை கள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எச்.எல்.தத்துவிற்கு கடிதம் எழுதியிருக் கிறார்.

உத்தரப்பிரதேசத்திலும், அரியானாவிலும் சிறுபான்மையினர்களைக் குறிவைத்து நடைபெற்றுள்ள என்கவுண்ட்டர் கொலை கள் குறித்து நான் தேசிய மனித உரிமை கள்ஆணையத்திற்குஎழுதினேன்.

அவற்றைக்குறித்துவிசாரிக்குமாறுநான் கேட்டுக்கொள்ளப்படவில்லை. இவை தொடர் பாக பல நினைவூட்டுகள் அனுப்பியும் பதில் இல்லை, என்றும் ஹர்ஷ் மாண்டர் அக்கடிதத்தில் எழுதியிருக்கிறார். இதேபோன்று அசு£மில் உள்ள மக்களில் சிலர் அயலவர்களாகக் கருதப்படும் நிலைமைகள் குறித்தும் மாண்டர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக ஆணையம் அவ்வாறு அயலவர்கள் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் மய்யங்களுக்கு இரு அதிகாரிகளுடன் விசா ரணை செய்வதற்காக அனுப்பி வைத்தது.

அப்போது அந்த விசாரணை தொடர்பாக தான் அனுப்பியஅறிக்கையை ஆணையம் மத்திய அரசுக்கு அனுப்பாமல், தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகள் எழுதிஅனுப்பியஅறிக்கையைமத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அனுப்பி யிருக்கிறது. அசாம் பிரச்சினை தொடர்பாக ஹர்ஷ்மாண்டர் கூறும்போது,

மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் இது மிகவும்அவசரமாகச் சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று. அசாம் மாநிலத்தில் பலலட்சக்கணக்கான மக்களை அயலவர்கள் என்று கருதும் ஆபத்து இருக்கிறது,  என்றார். இது தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணையத்துக்குள் தலையிடுவதற்கான வாய்ப்பு தனக்கு இல்லை என்றும் மாண்டர் தெரிவித்தார்.எனவேதான் நான் உடனடியாக பதவியை விட்டு விலகுகிறேன்.

ஏனெனில், அப்போதுதான் நான் மனித உரிமைகள் ஆணையத்தின் முன் எழுப்பிய பிரச்சினைகள் தொடர்பாக மேலும் சுதந்தி ரமாக என்னால் செயல்படமுடியும், என்று ஹர்ஷ்மாண்டர் தெரிவித்தார்.

ஹர்ஷ் மாண்டரின் பதவி விலகல் கடிதம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கேட்கப்பட்டபோது அதனிடமிருந்து எவ் விதப் பதிலும் வரவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner