எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவனந்தபுரம், ஜூலை 1- பணமதிப்பை நீக்கி, மக்க ளுக்கு பெரும் துயரத்தை ஏற் படுத்தியதற்காக, மத்திய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப் பினரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் இந்தி யர்களின் சேமிப்பு 50 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக செய் திகள் வெளியாகியுள்ள நிலை யில், இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் கடந்த 2017-ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது; இதன்மூலம் மத்திய அரசுகொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை யின் நோக்கம் வெளிப்பட்டு விட்டது; பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், எந்த வித மான பலனும் இல்லை என் பதும் அம்பலமாகி இருக்கிறது; மாறாக, மக்களுக்கு வேதனை யும், வலியும்தான் மிச்சம் என்று பினராயி விஜயன் அந்த பதிவில் கூறியுள்ளார்.அந்த வகையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நாட்டில் கொண்டுவந்து, மக்களை துயரப்படுத்தியதற்காக மத்திய பாஜக அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்றும்பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைப்பை கலைத்துவிட்டு, உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்ப தையும் பினராயி விஜயன் கண்டித்துள்ளார். பல்கலைக் கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு, தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு தன்னிச்சை யானது; மேலும், தேசிய உயர்கல்வி ஆணையத்தையும் மனிதவள அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது, இது உயர் கல் வியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று சாடி யுள்ளார்.

இதேபோன்ற ஒரு முயற்சி காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசிலும் கொண்டு வரப்பட்டதை நினைவுப் படுத்தியுள்ள பினராயி விஜயன்,  கல்வியை வியாபார மாக்கும் அந்த நோக்கத்தை, இடதுசாரிகளின் கடும் எதிர்ப் பால் காங்கிரஸ் அப்போது கைவிட்டது; செயல்பாட்டுக் குக் கொண்டுவரவில்லை; ஆனால், அதை பாஜக தலை மையிலான தேசிய ஜன நாய கக்கூட்டணி அரசு நனவாக்க முயல்கிறது என்றும் தெரிவித் துள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner