எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புனே, ஜூலை 1- புனேயில் நடை பெற்ற தேசிய நீச்சல் போட்டி யில் குரூப் 3 சிறுவர்களுக்கான பிரிவில் தமிழகம் வாகையர் பட்டம் வென்றது. தமிழக வீரர்கள் விசேஷ் பரமேஷ்வர் தங்கமும், நிதிக் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

35-ஆவது தேசிய மிக இளையோர் மற்றும் 45-ஆவது இளையோர் தேசிய நீச்சல் போட்டிகள் புனேயில் நடை பெற்றன. இதில் சனிக்கிழமை குரூப் 3 சிறுவர்களுக்கான பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பந்தய தூரத்தை 1 நிமிடம் 0.597 விநாடிகளில் கடந்து பரமேஷ்வர் தங்கம் வென்றார். நிதிக் வெள்ளியும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சித்தாந்த் சிங் வெண்கலமும் வென்றனர்.

குரூப் 3 சிறுவர்கள் பிரிவில் 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண் கலப் பதக்கங்களுடன் தமிழக அணி 61 புள்ளிகளுடன் வாகை யர் பட்டம் வென்றது. குரூப் 3 சிறுமியர் பிரிவில் 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்தைப் பெற்றனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner