எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஜூலை 2 ''சார்லஸ் டார்வினின் கோட்பாடு தவ றானது என, நான் கூறியதை, மக்கள், நிச்சயம் ஒரு நாள் ஏற்றுக் கொள்வர்,'' என, மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை இணை அமைச் சர்,சத்யபால் சிங் தெரிவித்துள் ளார்.

மத்திய மனித வள மேம் பாட்டுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ.க. வைச் சேர்ந்தவருமான, சத்ய பால் சிங், சமீபத்தில், சர்ச்சைக் குரிய கருத்தை தெரிவித்தி ருந்தார். அவர் கூறியதாவது:

''குரங்காக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்து தான், மனிதன் உருவானான் என்ற, சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு, முற்றிலும் தவறா னது.அந்த காலத்தில் எழுதப் பட்ட புத்தகங்களிலும், இப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால், டார்வினின் இந்தக் கோட்பாடு தவறானது. பள்ளி, கல்லுரி பாடப் புத்தகங்களிலி ருந்து, அதை நீக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறியிருந்தார்; இது, பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச் சியில், அமைச்சர், சத்யபால் சிங் நேற்று கூறியதாவது:

''நான், அறிவியல் மாணவன். ஆராய்ச்சி படிப்பை, வேதியியல் பாடப்பிரிவில் முடித்துள்ளேன். சார்லஸ் டார்வினின், 'மனித னின் பரிணாம வளர்ச்சி' கோட் பாடு தவறானது. இந்த விவ காரத்தில், எனக்கு எதிராக பேசியவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. இதை அனை வரும் கட்டாயம் சிந்திக்க வேண்டும்.நான், தவறு எனக் கூறியதை, இன்று அல்லது நாளை அல்லது ஒருவேளை, 10 அல்லது - 20 ஆண்டுகள் கழித்து கூட, மக்கள் ஏற்றுக் கொள்வர்.''

இவ்வாறு அவர் கூறினார்.