எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 3  இந்தியாவில் தாய் மொழியாக 19,500-க் கும் அதிகமான மொழிகள் பேசப் படுவதாக கடந்த 2011 மக்கள்தொகை கணக் கெடுப்புத் தகவல் களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், 121 மொழிகளைத் தவிர மற்ற மொழிகள் அனைத் தும் 10,000-க்கும் குறைவான மக்களால்தான் பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தலைமை பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சுமார் 121 கோடி மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில், தாய்மொழியாக 19,569 மொழிகள் பேசப்படு கின்றன. ஒட்டுமொத்த மக்களில் 96.71 சதவீதம் பேர், அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது பட்டியலில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் ஒன்றை தாய் மொழியாக கொண்டுள்ளனர்.

19,569 மொழிகளில், 121 மொழிகளே 10,000 மற்றும் அதற்கு அதிகமான மக்களால் பேசப்படுகிறது. மற்ற மொழிகள் அனைத்தும் 10,000-க்கும் குறைவான பேரால் பேசப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது பட்டியலில் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி ஆகிய 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 14 மொழிகள் தொடக்கத்திலேயே 8-ஆவது பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டன.

சிந்தி மொழி, கடந்த 1967-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. பின்னர், 1992-ஆம் ஆண்டில் கொங்கனி, மணிப்புரி, நேபாளி ஆகிய மொழிகளும், 2004-ஆம் ஆண்டில் போடோ, டோக்ரி, மைதிலி, சந்தாலி ஆகிய மொழிகளும் சேர்க்கப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner