எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 11 பிரதமர் மோடி கடந்த மாதம் விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந் துரையாடினார். அப்போது சத்தீஸ்கர்மாநிலத்தில் பங் கேற்றபெண்ஒருவர்,தனது விவசாய வருமானம் இரட்டிப் பாக அதிகரித்துள்ளது என கூறும்படி அதிகாரிகளால் வலி யுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது மனதின் குரலை மட்டுமேவெளிப்படுத்திவரு கிறார் என காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள் ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில்,

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஆனால், அது அவரது மன தின்குரலாகமட்டுமேஇருக்க வேண்டும் என விரும்புவது போல்தெரிகிறது.அவர் கூறியதுபோல் விவசாயிக ளின் வருமானம் இரட்டிப்பாக வில்லை. இது சத்தீஸ்கர் பெண்மணி விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும், சத்தீஸ்கர் பெண் கூறியதாக வெளியான வீடியோ வையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.