எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுக்கோட்டை, ஜூலை 12- புதுக்கோட்டையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தில் எதிர் கட்சிகள் கூறும் கருத்துக்கள் புறக்கணிக் கப்பட்டுள்ளன. ஊழல் நிறைந்த துறைகளாக இருக்கும் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவைகள் இந்த சட்டத் திற்கு பொருந்தாது என்று கூறி இருப்பதன் மூலம் உள்நோக் கத்தோடு சட்டத்தை அரசு நிறை வேற்றி உள்ளது. இதனால் எந்த மாற்றமும் ஏற்படப்போ வது கிடையாது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த ஒரு நீதிபதிக்கு மிரட்டல் வந்துள் ளது ஆபத்தானது. இது அந்த நீதிபதிக்கு அளிக்கக் கூடிய மிரட்டல் அல்ல, வழக்கை விசாரணை செய்து வரும் 3ஆ-வது நீதிபதிக்கு அளிக்கப்பட்ட மிரட்டலாகும். பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப் போவது கிடையாது. தமிழ கத்தில் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் இருக்கும் வரை பா.ஜ.க.வின் கனவு பலிக்காது. ஊழல் குறித்து அமித்ஷா கூறியுள்ளார். அந்தக் கருத்தை கூற அவருக்கு தார்மீக உரிமை உள்ளதா என் பதை பா.ஜ.க. விளக்க வேண் டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன தவறு என்று நீதிமன்றம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் குறித்து இலங்கை பெண் அமைச்சர் கூறியிருக்கும் கருத்து வரவேற் கத்தக்கது. தமிழகத்தில் தீவிர வாதிகள் உள்ளனர் என்று மத் திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியிருக்கும் குற் றச்சாட்டிற்கு, முதல்-அமைச்சர் பதில் அளிக்காமல் இருப்பதன் மூலம் மத்திய அமைச்சர் கூறும் கருத்து உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்ததால் கிராமப்புற மாணவர்கள் கேள்வி பாதிப்பிற்கு உள்ளாகி னர். இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தவறான 49 கேள்விகளுக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதனை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம் பந்தப்பட்ட துறையினர் மேல் முறையீடு செய்யாமல் நடை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.