எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

புதுடில்லி, ஜூலை 13  தொழில்துறையில் தமிழ் நாடு முதலிடம் பெறுவதற் கும், தொழில் தொடங்க எளிமையான நடை முறைகள் பின்பற்றுவதில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களோடு போட்டி போட்டு முதலி டத்தை தக்க வைத்துக் கொள்ளும் தமிழ்நாடு அரசு, தற்போது 15ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது. முதல் 10 இடத்தில் கூட இடம் பெறவில்லை.

தொழில் தொடங்குவதற்கு எளிமையான நடைமுறைகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தொடர்ந்து ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. உலக  வங்கியுடன் இணைந்துதொழில் முதலீடு மற்றும் மேம் பாட்டுத்துறை (டி.அய்.பி.பி.) இணைந்து நடத்திய இந்த ஆய்வில் முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா இரண்டாமிடத்திலும் ஹரியானா மூன்றாமிடத் திலும் உள்ளன. ஜார்க்கண்ட், குஜராத், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வர்த்தக சீர்திருத்த செயல் திட்டம் (பி.ஆர்.ஏ.பி.) அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சொத்து பதிவு செய்வதில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கட்டிடத்துக்கான அனுமதி வழங்குவதில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தொழிலாளர் கட்டுப்பாடுகளில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது.

சுற்றுச் சூழல் பதிவில் கருநாடகம் முதலிடத்திலும், நிலம் கிடைப்பதில் உத்திரகாண்ட் மாநிலம் முதலிடத்திலும் உள்ளன. வரி செலுத்துவதில் ஒடிசா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. பயன்பாட்டு அனுமதி வழங்குவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொழில்களை ஈர்ப்பதற்கு எளியவழிகளை அரசு வகுத் துள்ளது. அதில் 7 மாநிலங்கள் மட்டுமே 50 சதவீதத்துக்கும் மேலான சீர்திருத் தங்களை கொண்டு வந்துள்ளன. இரண்டாம் பிரிவில் வகுத்துள்ள சீர்திருத்தங்களை 18 மாநிலங்கள் வகுத்துள்ளன.இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு மொத்தம் 21 மாநிலங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு 372 செயல் திட்டங்களை கண்டறிந்து அதை மாநிலங்கள் செயல்படுத்துமாறு அறிவுறுத் தியது. தொழில்களை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கிடையே ஆரோக் கியமான போட்டி உருவாகவேண்டும் என்பதற்காக இந்த யோசனையை மத்திய அரசு வகுத்தளித்திருந்தது.

எளிதாக தொழில் தொடங்குவது தொடர்பாக உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட நாடுகளிடையிலான பட்டியலில் 190 நாடுகளில் இந்தியா 100-ஆவது இடத்தில் உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner