எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஜூலை 15 அன்னைத் தெரசாவால் நிறுவப் பட்ட கிறிஸ்துவ தொண்டு அறக் கட்டளைக்கு களங்கம் ஏற் படுத்தும் முயற்சியில் ஈடுபட் டுள்ளதாகவும், அதில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வ தாகவும் பாஜக மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தொண்டு அறக்கட்ட ளைக்கு சொந்தமான குழந்தை கள் காப்பகத்தில் இருந்து பச்சிளம் குழந்தையை விற் பனை செய்ததாக அங்குள்ள கன்னியாஸ்திரி ஒருவரை, மாநில பாஜக அரசு கைது செய்திருப்பதைக் கண்டிக்கும் வகையில் மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.

ராஞ்சியில் தொண்டு அறக் கட்டளைக்கு சொந்தமாக நிர்மல் ஹ்ரிடே' என்ற குழந் தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. அங்கிருந்த பச்சிளம் குழந்தையை, அனிமா இந்த் வார் என்ற கன்னியாஸ்திரி, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இணையருக்கு விற்பனை செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதன் அடிப் படையில் அந்த கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டார்.

மேலும், நிர்மல் ஹ்ரிடே காப்பகம், அதன் மற்றொரு காப்பகமான சிசு நிகேதன் ஆகியவற்றில் இருந்த 22 குழந் தைகள் மீட்கப்பட்டு ஜார்க் கண்ட் அரசின் குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைக் கப்பட்டனர். அத்துடன், மேற் குறிப்பிட்ட இரு காப்பகங் களும் சீல் மூடப்பட்டன.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது சுட்டுரைப் பதிவில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியிட்ட பதிவில், தொண்டு அறக்கட்டளை அன்னை தெர சாவால் நிறுவப்பட்டது. ஆனால், அந்த அமைப்பு தற் போது சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவர்களது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி நடைபெறுகிறது. கன் னியாஸ்திரிகள் குறிவைக்கப்  படுகின்றனர். யாரையும் சுதந் திரமாக இருக்க பாஜக அனு மதிக்காது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிஷனரி அறக்கட்டளை தொடர்ந்து ஏழைகளுக்கு சேவையளிக்கும் பணியில் ஈடுபட அனுமதிக்கப் பட வேண்டும்'' என்று குறிப் பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜார்க்கண் டில் உள்ள அறக்கட்டளையின் கிளை மீதும், அதில் உள்ள பணியாளர்கள் மீதும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சி யளிப்பதாகவும், இந்த விவகா ரத்தில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் மிஷனரி அறக்கட்டளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner